பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

இலக்கிய விழைவிலர்: இலக்கணம் படிக்கிலர்; எழுத்திலும் உரையிலும் இழிகுவர்; கலக்குறு மனத்தினர்; கசிதுயர் கருதிலர்; களவிலுங் கொலையிலும் அழிகுவர்; - துலக்கமில் மனங்கொளத் துடிப்புறு முளத்தினர்; தொலைகிலாப் பிரிவினால் ஒழிகுவர்; வலக்கரம்; கரவுளம், வனைவிலர்க் கிராப்பகல் வருந்திநெஞ் சழன்றுயிர் கழிகுவேன்! 5

பயனறு வினைசெயப் பலபடக் கரைந்திழி பகட்டினில் உளமுயிர் கூடுவர்; . . வயின்வயின் இளையவர் மடந்தையர் குழுமுவர்; வரைதுறை யறநகை யாடுவர்; - மயலுற விழிதகை யுரைதருஞ் சுவடிகள் மலிகடை புகுந்தவர் தேடுவர்; வியனுறு தமிழக வினைவழி வுறவுளம் விசிந்துயிர் விசிந்துடல் வாடுவேன்! 6

அறிவியல் உயர்வறிந் தனரென முழக்குவர்;

அடிப்படை உளவுயர் வழிந்தனர்;

பொறியிய லறிந்தன மெனவுரை தருக்குவர்; புகுபயன் மறந்தொழுங் கொழிந்தனர்; நெறிமுறை பிறழ்ந்தனர்; மனையறந் துறந்தனர்! நிலையினில் நொடிநொடி யிழிந்தனர்; குறியிலர்; பிடியிலர், துணிவிலர்; வினையிலர்; குலைவுறு மவர்க்குளம் அழுங்குவேன்! 7

முதுதமிழ் உலவிய முனைப்பொழு திலங்கிய முழுவளங் குறைவுற வினைப்பயன் . . . . . . எதுவென அறிகிலன்; இடர்ப்படும் மனத்தினன்; இலவென அலைகுவன்; நினைப்பிலன்; : மதுமலர்க்குழலியர் - பகைவரின் மனைவியர், மறத்தமிழ் அரசரின் థ్రా ப்ேபினால் ; -