பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

33

எழுவாய் நெஞ்சே!

இளைத்துள்ள தமிழ்நெஞ்சே! எழுவாய்நீ! எதன் பொருட்டா யெண்ணி யெண்ணிக் களைத்துள்ளாய் வருந்தற்க; களிப்புறவே ஒருவழியைக் காட்டு கின்றேன்; முளைத்துள்ள தமிழ்ப்பயிரில் மூண்டெழுந்த களையனைத்தும் முனைந்து நீக்கி விளைத்துள்ள பசுந்தமிழை விரிவடையச் செய்யவினை விரும்பு வாயே! -

அயர்வுற்ற தமிழ்நெஞ்சே! ஆர்த்தெழு,நீ! அயர்வறுக்கும் ஆறு சொல்வேன்; உயர்வுற்ற நறுந்தமிழர் உளச்சிறப்பில் இழிகின்றார்; உழைப்பி லாது மயர்வுற்ற சிறுசெயலில் மடிகின்றார்; அன்னவர்க்கு மலைவு நீக்கிப் பெயர்பெற்ற தமிழகத்தின் பெருமையெலாம் உணர்வுபெறப் பேசு வாயே!

வருந்துகின்ற தமிழ்நெஞ்சே! வருந்தற்க; வளப்பமுறு வழியு ரைப்பேன்; - * இருந்தழிந்த சிறப்பெல்லாம் எடுத்தவர்க்கே இயம்பிடுங்கால், இனியிந் நாட்டில் பொருந்திவரா இழிசாதிப் புகைச்சலெல்லாம், சமயஞ்சேர் புரைக ளெல்லாம் - திருந்திவரா விடிலழிவு திகழுமென்று மனங்கொளவே தெளிவிப் பாயே!

புகைசேர்ந்த தமிழ்நெஞ்சே! பொலிவுபெறு! புகழ் சேர்ந்த தமிழ்நி லத்தில் பகைசேர்ந்த தாற்சேர்ந்த பழியெல்லாம் இழிவெல்லாம் பதைக்கக் கூறித் தகைசேர்ந்த பண்பெல்லாம் உயர்வெல்லாம்: தமிழ் நிலத்துத் தழைக்க வாழ்த்தித் -

தொகை சேர்ந்த தமிழ்க்குழுவைத் திரட்டியொரு,

துணையாக்கத் துடிப்பார் வாயே! . . . .

1