பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

நைகின்ற தமிழ்நெஞ்சே! நலிவகற்று; நலஞ்சேர்க்கும் நடையு ரைப்பேன்; மெய்குன்ற, நலங்குன்ற, மேலோர்க்குக் கீழோர்செய் மிடிமை முற்றும் பொய்குன்றக் குன்றுமெனப் புகட்டி, அவர் புன்செயலின் புரையை நீக்கி, உய்கின்ற திறங்கூறி உணர்ந்தொழுங்கில் உயர்வுறவே உரைசெய் வாயே! -

வாடுகின்ற தமிழ்நெஞ்சே வனைந்தெழுநீ; வாட்டமிலா வகையு ரைப்பேன்! கூடுகின்ற மாந்தரெல்லாம் உன்னினத்தார்; அன்னவரின் கூட்டுக் குள்ளே ஒடுகின்ற குருதிதமிழ்; உணர்வுதமிழ்; உயிரெல்லாந் தமிழ்,என் றாலும் ஆடுகின்ற நாகரிக நிழலாட்டம் அயலாமென் றறிவிப் பாயே!

நொடிகின்ற தமிழ்நெஞ்சே! உயர்ந்தெழு நீ! நோவகற்றும் உளவு சொல்வேன்; வடிகின்ற தமிழுணர்வில் உயர்வுளத்தைக் குளிப்பாட்டி வனைவு செய்து, படிகின்ற இலக்கியநீர் பருகிவரப் பைந்தமிழ் நாட் டிருள்ம றைந்து விடிகின்ற ஒளிக்கதிரை விழிகுளிரக் காண்பமென விளம்பு வாயே!

துடிக்கின்ற தமிழ்நெஞ்சே! துள்ளுக.நீ! துன்பமில்லாத் தோது சொல்வேன்: அடிக்கின்ற புயற்காற்றும் தமிழானால் அதையேற்போம்! அயரா மின்னி

இடிக்கின்றவல்லிடியும் தமிழானால்

இனியதென ஏந்தும் நெஞ்சு குடிக்கின்ற கூழெல்லாம். தமிழாயின் அமிழ்தென்று கூவுவாயே!