பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல்

85


வேற்றூரிலிருந்து வந்த உறவினர்க்கும் நண்பர்க்கும் இங்ஙனமே சிறப்பு நடக்குமேனும், அது அறத்தின்பாற் படாது, வழக்கமும் கடமையும் பற்றியதாகும். அதனால், அதை உறவாடல் என்றும் நட்பாடல் என்றும் பிரித்துக் கூறல் வேண்டும்.

விருந்தோம்பல் என்னும் சிறந்த அறம், ஆரியர் தென்னாடு வந்து பிறப்பொடு தொடர்புற்ற குலப் பிரிவினையால் தமிழரின் ஒற்றுமையைச் சிதைத்தபின், தமிழகத்து அடியோடு நின்றுவிட்டது.

விரும்புவது என்னும் வேர்ப்பொருளைக் கொண்ட விருந்து என்னுஞ் சொல், பின்பு விரும்பப் பெற்ற புதியவரையும் அவர் நிலைமையான புதுமை யையும் அவர்க்களிக்கும் சிறந்த வுணவையும் முறையே குறித்து, இன்று உறவினர்க்கும் நண்பர்க்கும் படைக்கும் சிறந்த வுணவையே குறிக்கும் இழிபடைந்துள்ளது. பண்டை விருந்தினர் புதியவராயிருந்ததினால் புதுவர் எனவும் பட்டார்.

"புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர் (மலைபடு. 413)

81.இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

(இ-ரை.) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவியும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள் களையும் பேணிக் காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.

இக்காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளு மில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல்வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். 'விருந்து' பண்பாகுபெயர்.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

(இ-ரை.) சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் உணவு சாவை நீக்கும் மருந்தே யெனினும்; விருந்து புறத்ததாத் தான் உண்டல் வேண்டற்-