உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

156

திருக்குறள்

தமிழ் மரபுரை




யையும் மருமங்களையும் அறிவதும், அரசன் உருமாறிச் சென்று நகர நோட்டம் செய்வதும், காதலர் தொடக்க நிலையில் மறைவாக ஒழுகுவதும், தற்கொலை செய்யத் துணிந்த ஒருவர் உண்ண வைத்திருந்த நஞ்சை மறைவாக நீக்குவதும், அரசியலிலும் இல்வாழ்க்கையிலும் குற்றமாகாத களவு வினைகளாம்.

போரிற் பகைவரையும் செங்கோலாட்சியிற் கொலைஞரையும் கொல்வது, அரசனுக்குக் கடமை மட்டுமன்றி அறவினையுமாம்.

இங்ஙனமே ஏனையவற்றையும் உணர்ந்து கொள்க.

நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாத கணவன் மனைவியர் இறை வனை நோக்கித் தவங்கிடப்பினும், வாழ்நாள் முழுதும் அதைத் தொடர்வது மரபன்மை காண்க. இதை,

"மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்"(70)

என்னும் குறளை நோக்கி யுணர்க.

தமிழர் வாழ்க்கைமுறை இல்லறம் துறவறம் என இருவகைப்பட்டதே. இல்லறம் போன்றே துறவறமும் எல்லார்க்கும் பொதுவாம். அதற்குப் பருவ வரம்போ அகவை வரம்போ இல்லை. ஆயின். ஆடவனாயினும் பெண்டிராயினும் தனியாகவே அல்லது தன் பாலார் இருக்குமிடத்திலேயே தங்கல் வேண்டும். ஆரியர் மனைவியோடு கூடி மேற்கொள்ளும் காடுறைவு (வானப் பிரத்தம்) என்னும் மூன்றாம் நிலையும், தம்மை முனிவர் என்று கூறிக் கொண்டே இல்லற இன்பத்தை நுகர்ந்து மனைவி மக்களொடு கூடி வாழும் வீடுறைவும், தமிழரும் திரவிடருமான பழங்குடி மக்களை ஏமாற்றித் தாம் என்றும் இன்பமாய் வாழ வகுத்த சூழ்ச்சியாதலால், கூடாவொழுக்கத்தின் பாற்பட்ட போலித் துறவேயென வுணர்க.

இனி, வீடுபேறு இறைவனை வழிபட்டு அவன் திருவருளாலேயே அடையக் கூடியதாயிருப்பதால், கடவுட் கொள்கையில்லா மதத்தினர் துறவறம் ஒழுகுவதும் பயனில் முயற்சியும், அவர் வீடு பெறுவது கானல்நீர் குடிப்பதும் ஆகும். (கானல் - பேய்த்தேர்).

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்"(குறள்.10)

என்று திருவள்ளுவரும்,