பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

திருக்குறள்

தமிழ் மரபுரை



"கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்" (1137)

என்னுங் குறளில் தழுவப்பெற்றுள்ளது.

"மாவும் மாக்களும் ஐயறி வினவே " (1531)

"மக்கள் தாமே ஆறறி வுயிரே" (1532)

என்று தொல்காப்பியர் வகுத்ததற்கேற்பவே, திருவள்ளுவரும் மாந்தருட் பண்பட்டவரை மக்கள் என்றும் படாதவரை மாக்கள் என்றும் பிரித்துக் கூறியுள்ளார்.

எ-டு:

"மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்” (997)

"மக்களே போல்வர் கயவர்” (1071)

"கொலைவினைய ராகிய மாக்கள்" (329)

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்" (420)

(2) "இல்லதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ
னில்லவள் மாணாக் கடை. " (53)

என்னுங் குறளில் வந்துள்ள ஆனால் என்னும் சொல்வடிவம் தொல்காப் பியர் காலச் செய்யுள் நடைக்கு ஏற்காமை.

(3) "ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல " (510)

என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலும் கைக்கொள்ளப் பெறாதிருத்தல்.

எ-டு:

"நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு மெழுநாளே மேனி பசந்து." (1278)

இவ் வுயர்வுப் பன்மை யாட்சியே 'மற்றையவர்கள்' (293) என்னும் இரட்டைப் பன்மையாட்சிக்கும் இடந்தந்தது.