பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

15



பளித்திருக்கும். அவர் நூல் ஆரியத்தை வன்மையாகக் கண்டிப்பதால், அது இயற்றப்பெற்றபின் பிராமணர் கிளர்ச்சியாலும் அரண்மனைப் பிராமணப் பூசாரியின் தூண்டுதலாலும் அவர் தம் பதவியை இழந்திருக்க வேண்டும்.

அதன்பின், அவர் நெடுந்தொலைவிலுள்ள மயிலை சென்று நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கலாம். அல்லாக்கால் ஏலேலசிங்கன் தொடர்பிற்கும், பட்டப்பகலில் நெசவுக்குழலைத் தேட வாசுகியம்மையார் தம்கணவர் சொற்படி விளக்குக் கொண்டுவந்தார் என்னும் கதைக்கும். இடமில்லை.

வாழ்ந்த இடம்: திருவள்ளுவர் முன்பு மதுரையிலும் பின்பு மயிலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது.

அவர் பாண்டிநாட்டில் நீண்டகாலம் வாழ்ந்திராவிடின், ஊருணி,பைய, வாழ்க்கைத்துணை என்னுஞ் சொற்களை ஆண்டிருக்கவும் அண்மை யிலுள்ள சேரநாடு சென்று அக்காலத்து நம்பூதிரிப் பிராமணக் கன்னிகையர் சவச்சடங்கை யறிந்து,

""பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று (913)

என்னும் உவமையை அமைத்திருக்கவும் முடியாது.

"இப்பக்க - மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு"


என்பதும் ஒருவகையில் திருவள்ளுவரின் மதுரை வாழ்க்கையை உணர்த்தும்.

சமயம்: ஆரியர் வருமுன்னரே, தமிழர் சமயத்துறையில் தத்தம் அறிவுநிலைக் கேற்ப, சிறுதெய்வ வணக்கத்தாரும் பெருந்தேவ வழி பாட்டாரும் கடவுள் மதத்தாரும் ஆக முந்நிலைப்பட்டிருந்தனர்.

இம்மைப் பயனையே அளிப்பனவாகக் கருதப்பெறும் இடத்தெய்வங்களும் பூதத்தெய்வங்களும் நடுகல் தெய்வங்களும் சிறு தெய்வங்களாம். இம்மையில் மழையையும் மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் அளிப்பவனாகக் கருதப்பெற்ற வேந்தன் பெருந்தேவனாம். இம்மையில் இவ்வுலக இன்பத்தோடு மறுமையில் பிறவி நீக்கப் பேரின்ப வீட்டையும் அருள்பவனாகக் கருதப்பெற்ற இறைவன் எல்லாவற்றையுங் கடந்துநிற்கும்