பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

23



குடி, வரலாற்றிற் கெட்டாத தொன்றுதொட்டுத் தென்னாட்டை யாண்டு வருவதாலும்,

"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு”,

"பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை”

"மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை”

"பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு"

என்று திருக்குறள் பல்துறை நூல்களையுஞ் சுட்டுவதாலும்,

"இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்
 பரந்த மொழியான் அடிநிமிர்ந் தொழுகினும்
தோலென மொழிப தொன்மொழிப் புலவர்"
(1985)

என்னுந் தொல்காப்பிய நூற்பா, கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட அறம்பொரு ளின்ப வீட்டு நூல்களைக் குறிப்பதாலும்,

"ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம்
தாரண மறமே சந்தத் தம்பநீர் நிலமு லோகம்
 மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள"

என்று ஒரு பழந்தனிச் செய்யுள் கூறுவதாலும்,

திருவள்ளுவர் வேந்தர்க்கு உள்படுகருமத் தலைவராயிருந்ததாகத் தெரிவதனாலும், அவர் திருக்குறள் இயற்றியதற்கு வடநூற்றுணை எத்துணையும் வேண்டியதா யிருந்ததில்லையென, அவர் நூலை வழிநூலென் பார் கூற்றை மறுக்க.

முழுநிறைவு

அறம்பொரு ளின்பம் வீடென்னும் நாற்பொருளையும்பற்றி விளக்க மாகக் கூறுவதனாலும். ஒவ்வோர் அதிகாரத்திலும் அதற்குரிய பொரு ளைப்பற்றிய எல்லாக் கருத்துகளையுங் கொண்டிருப்பதனாலும், திருக்குறள் முழுநிறைவான நூலாகும்.