பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

திருக்குறள்

தமிழ் மரபுரை



1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

(இதன் தொடருரை) எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகவுடையன, உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமை யுருபின்மையால் முதன்மைபற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப் பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்து களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது.

"அகர முதர வெழுத்தெல்லா மாங்குப்
பகவன் முதற்றே யுலகு"

என்றே யிருக்கலாம். 'ஆங்கு' உவம வுருபு.

பகவன் என்பது பகுத்துக் காப்பவன் அல்லது எல்லா வுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென்சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) வ. என்று திரியும். ஒ.நோ:புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

'பகவன்' தென்சொல்லே. பகுத்தளிப்பவன் 'படியளப்பவன்' என்பது பொருள். வடமொழியிலும் அஃதே. 'பகு' என்பதை வடமொழியில் 'bhaj' எனத் திரிப்பர். பாகம் 'bhaga' என்னும் சொற்கும் வடமொழியில் இதுவே வேர். உடைமை, புகழ் முதலிய அறுகுணமுடையான் என்பது பிற்காலத்தார் பொருத்தப் பொய்த்தலாம். பண்டை யுழவன் தன் விளைவை அறு கூறிட்டதனாலும், பகு என்னும் பொருளுண்டாயிற்று. ஆறுறுப்புடைமை யாலும் பகம் என்னும் சொற்கு அறு என்னும் பொருளுண்டாயிற்று. பகம் = பகுதி.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிறமதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக் குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்து விட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற் கடவுள் என்றும் அடை-