உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

எ-டு: அப்பச்சு (அப்பச்சி) = பாட்டன்

அம்மாச்சி = பாட்டி.

தா- பெயர்கள் இங்ஙனம் தொடர்ந்து தாயையே குறிப்பது முண்டு.

எ-டு: அம்மணி (அம்மண்ணி), அம்மனை.

தா-பெயர் பாட்டியைக் குறிப்பதுமுண்டு.

எ-டு: அவ்வை = தா-, பாட்டி.

87

(9) அம்மை அப்பன் என்னும் பெயர்கள், தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலக மெங்கணும் அவ்வந் நாட்டிற்கேற்பத் திரிந்து வழங்குகின்றன.

(10) மேற்காட்டிய இருமுதுகுரவர் முறைப்பெயர்களை, விதப்பாக அம்மை அப்பன் என்பவற்றை, குழவி வளர்ப்பொலிகளின்பாற் படுத்துவர் மேலை மொழிநூல் வல்லார். ஆயின், அண்ணன் என்னும் பெயர் உயர்ந்தோனுக்கும் தமையனுக்கும் பொதுவாயிருத்தலாலும், ஐயன் என்னும் பெயர் முதலாவது பெரியோனைக் குறித்துப் பின்பு திரிந்தும் திரியாதும் ஐங்குரவரையும் பொதுப்படச் சுட்டுவதாலும், அம்மை அப்பன் முதலிய பெயர்கள் மூப்பும் அருமையும்பற்றிப் பிறருக்கும் பால் தவாறது வழங்குதலாலும், உயர்ச்சி குறிக்கும் உகர வடியின் திரிபான அகரவடியும் உயர்ச்சி குறித்தலாலும், அவற்றைச் சுட்டொலிகளின் பாற்படுத்துவதே சாலச் சிறப்புடைத்தாம்.

ரிய மொழிகளெல்லாம் திரிபுடை மொழிக ளாதலின், அவற்றைத் தா-மொழியாகக்கொண்ட மேனாட்டார் அம்மை அப்பன் என்னும் சொற்களை முறையே மா பா என்னும் குழவியொலிகளி னின்று திரிந்தவையாகக் கொள்வது வியப்பன்று.

(14) பின்மை

குறுக்காக வளரும் விலங்கு பறவைகட்கு உடம்பின் உச்சமான இடம் அல்லது மேற்புறம் முதுகாதலின், உகரச்சுட்டிற்குப் பின்மைக் கருத்தும் சிறுபான்மை உரித்தாம்.

மேலும், காலமுன் இடமுன் என முன்மை இருவகைப்பட்டு முன்மைக் கருத்தில் பின்மைக் கருத்தும் பின்னை கருத்தில் முன்மைக் கருத்தும் மயங்குதலால், அதனாலும் முன்மைச் சுட்டு பின்மைக்