உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

xix. குட்டையாதல் (சிறுத்தல்)

113

முனை மழுங்கின பொருளும் மேன்மேலும் முனை தேயும் பொருளும், குட்டையாகும். குறைதலும் குட்டையாதலே.

குள் - குள்ளம். குள் - குள்ளை. குள் - குள்ளல்.

குள் குட்டை

-

கட்டை.

குள் -கூள் -கூளி = குள்ளம், குள்ளமானது.

-

கூள் கூழை =

குள்ளம், குட்டை, குள்ளமானது, குட்டையானது.

கூழை கூழையன்.

குள் - (குண்) - குணில் = குறுந்தடி.

குல் - கு (குறுமை முன்னொட்டு - diminutive prefix).

எ-டு: குக்கிராமம் (வ.)

ஒ.நோ. நல் - ந. நப்பின்னை, நக்கீரன்.

XX. தட்டையாதல்

மிகக் குட்டையான பொருள் தட்டையாகும். உயரமான பொருள் களெல்லாம் சற்றுக் குறுகின் குட்டையும், மிகக் குறுகின் தட்டையும் ஆம்.

சட்டு

சட்டு என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பழந்தமிழ் வினைச் சொல். சட்டுச் சட்டென்று தட்டுகிறான் என்பது வழக்கு. தட்டும் பொருளும் தட்டப்படும் பொருளும் தட்டையாகும். தட்டுதலும் ஒருவகை முட்டுதலே. முட்டுதல், வினைமுதல் முட்டுதலும் கருவி முட்டுதலும் என இருவகை. சினைவினை வினைமுதல் வினை யொக்கும்.

(சுத்துதல்) = தட்டுதல். சுத்து சுத்தி சுத்தியல் = தட்டுங்கருவி. சுத்து - சுட்டு.

(சுட்டு) சட்டு

சடை. சடைதல் = அடிக்கப்படும் ஆணி முனை

மழுங்கித் தட்டையாதல்.

சட்டு சட்டம் = தட்டையான மரப்பட்டி.

=

சட்டகப்பை = தட்டகப்பை.

சட்டு சட்டுவம் - சட்டுகம் = சட்டகப்பை.

சட்டுவம் = சட்டகப்பை, தட்டையான பானை.