உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

சட்டுவம் - சருவம்.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சட்டம் = தட்டையான பனையோலை. சட்டம் வாருதல் = ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுவதற்கு ஏற்றதாக்குதல்.

சட்டம் - சட்டன் = ஓலைச்சுவடி பயிலும் மாணவன்.

சட்டன் + நம்பி = சட்டநம்பி =

= மாணவர் தலைவனாகிய ஆசிரியன்,

தலைமை மாணவன். சட்டநம்பி - சட்டம்பி. சட்டநம்பிப்பிள்ளை - சட்டம்பிப்பிள்ளை

சட்டம் =

சட்டாம்பிள்ளை.

மரச்சட்டம், கோடிழுக்கும் சட்டப்பலகை, நேர்மை,

செப்பம், முறைமை, நீதியொழுங்கு, வரம்பு, விதி.

மாணவர் பார்த்து ஒழுங்காக எழுதுவதற்கு வரையப்பட்டிருப்பது மேல்வரிச் சட்டம் எனப்படும்.

மேல்வரியில்

ஓர் அமைப்பகத்தின் கரும் நடப்பிற்குரிய விதியொழுங்கு முழுவதும் சட்டதிட்டம் எனப்படும்.

சட்டம் = விதி, விதிக்கும் அதிகாரம், அதிகாரத்தாற் பெற்ற வுரிமை.

"இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம்

ருண்ணும்

சட்டமுடன் கொள்ளுண்ணும்....

சட்டம்

=

இருபோ

(வேதநாயகம்பிள்ளை தனிப்பாடல்)

சடங்கு மதவிதிப்படி அல்லது ஒழுக்க விதிப்படி நடைபெறும் கரணம்.

சட்டம்

= படம் கண்ணாடி முதலியவற்றின் நாற்புறமுங் கோக்கப்படும் மரச்சட்டம். சட்டக் கட்டில், சட்டக் கதவு, சட்டப் பரம்பு, சட்ட வாள் முதலியன நாற்புறமுஞ் சட்டங் கோத்தவை.

சப்பரம், முகடு முதலியவற்றிற்குச் சட்டங்கட்டுதல் ஆயத்த வினையாயிருத்தலின், சட்டங் கட்டுதல் என்பது ஆயத்தஞ் செ-தல் என்று பொருள்படும்.

உடம்பு உயிருக்குச் சட்டம்போன்றிருப்பதால், அதுவும் சட்டம் எனப்படும்.

சட்டம் - சட்டகம் (frame, outline).

சட்டம் சட்டை = உடம்பு, உடம்பின் மீந்தோல், அதுபோன்ற மெ-ப்பை.