உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

அலசுதல் = இழையகலுதல். அலசல் = இழையகன்ற துணி.

அலர்தல் = மலர்தல்.

அலவை = பரத்தைமை.

கலத்தல் = பரத்தல். கலக்க நடுதல் என்னும் வழக்கைக் காண்க.

"கட்டுரை கலந்த காலை

கல

-

கலவு

""

121

(கம்பரா. கர. 68)

கலவம்

கலாவம் = அரைப்பட்டிகை, மயிற்பீலி.

கலை = ஆடை.

சல்லா = அலசல் துணி, சல்லாரி = அலசற் சீலை.

சல்லவட்டம் = கேடகவகை.

துவைத்தல் = குற்றுதல். துகில் = துணி. துகிலிகை = துணிக் கொடி.

தகழி = அகல்.

தகண் = புற்பற்றை. தகண் - தகடு.

(துட்டு) தட்டு

தட்டம்

தடம்

=

அகலம், பெருமை, அகன்ற

குளம். தடம் - தடாகம்.

தளம் = தட்டு, பரப்பு, படை இதழ். தாளம் = சாலர்.

தாலம் = தட்டு, யானைக்காது.

நல் - (நால்) - நாலம் - ஞாலம் = பரந்த உலகம்.

பருமையும் அகலமும் ஒன்றே. பெரிய இலை, பெரிய தாள், பெரிய தட்டு, பெரிய துணி, பெருவழி என்று அகன்ற பொருள்களைக் கூறுதல் காண்க.

நனம் = அகலம். நனம் - நனவு = அகலம்.

மலர்தல் = விரிதல்.

மூலம்

இங்குக் காட்டப்பட்ட சொற்கள் பலவற்றிற்கு நேர் அகரமுதலாயினும், அடிமூலம் உகரமுதல என்பது ஒருதலை. இது இப் படலம் முழுமைக்கும் ஒக்கும்.

xxii. அமுங்குதல்

அமுங்குதலாவது ஒரு பொருள் அழுந்த முட்டுதல்.

(அள்) உறுத்து. (உள்)

உறு அழுத்தம்.

அழு அழுந்து அழுத்து

(உம்) - அம் - அமுங்கு அமுக்கு அமுக்கம். (நும்) - நெம் - (நெமுங்கு - நெமுங்குதல் = அமுங்குதல்.

(நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு - நெருக்கு - நெருக்கம்.