122
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
(3) குத்தல் முறை
குத்தல் என்பது, மொட்டைக் கருவி குத்துதலும் கூர்ங்கருவி குத்துதலும் என இருவகை. இவற்றுள் முன்னது முட்டல் துறையில் கூறப்பட்டுள்ளமையின், பின்னதே ஈண்டுக் கூறப்படும்.
i. குத்துதல்
குள் - கிள். குள்ளுதல் = நகத்தாற் கிள்ளுதல்.
குத்து - குந்து.
—
குத்து கொத்து கொட்டு.
சுள் - சுள்சுள் என்று குத்துகிறது என்பது வழக்கு.
சுள் - சுர் - சுருக்கு - சுறுக்கு (குத்தற்குறிப்பு).
—
தூண்டுதல் குத்துதல்.
துள் - தெள் - தெறு. தெறுதல் கொட்டுதல்.
(5-)
துள் - தள் என்னும் வழக்கைக் காண்க.
நுள்.
=
தை. தைத்தல் குத்துதல். முள் தைக்கும்
முள். முசுமுசுத்தல் = தினவெடுத்தல்.
ii. குந்துதல்
குந்துதலாவது நிலத்திற் குத்துவதுபோல் உட்கார்தல். குண்டி குத்துதல் என்பது நாகை வழக்கு. குத்த வைத்தல் என்பது பாண்டி நாட்டு வழக்கு.
குத்து - குந்து. குந்துதல் = உட்கார்தல்.
=
குத்து குத்தி குதி. குதிங்கால் = நிலத்திற் குத்தும் அடிப்பாதம். குதை = நிலத்திற் குத்தும் விற்கோலடி
குதிர்தல் settle.
=
காரியம் குந்துவதுபோல் ஏற்பாடாதல். ஒ.நோ: sit
குந்து – குந்தனம் = மணிக்கல்லைக் குந்தவைத்தாற்போற் பதிக்குந் தகடு. குத்துக்கல், குத்துவிளக்கு முதலிய பெயர்களும் குந்தியிருத்தல்பற்றி ஏற்பட்டவையே.
முள் - (முள்கு) - முள்கா. முள்காத்தல் = குந்தியிருத்தல்.
"மூசுப்போல முள்காந் திருப்பர்"
(நன். விருத்தி.96)