உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

xiv. வெண்மை

149

ஒளியானது வெண்மையா யிருத்தலால், ஒளியை அல்லது விளக்கத்தைக் குறிக்கும் சொற்களினின்று (அல்லது சொல்லடி களினின்று) வெண்மையைக் குறிக்குஞ் சொற்கள் பிறந்துள்ளன.

நெருப்புச் சிவந்ததென்றும், கடுமையான கதிரவனொளி வெண்மை யானதென்றும், பொதுவாகக் கொள்ளப்படும்.

குரு குருகு = வெண்மை.

துல் - துல்லியம் = வெண்மை.

துள் - தெள் - தெளி. தெளிதல் = வெண்மையாதல்.

புல் - பல் - பால் = வெண்மை.

பால் - வால் = வெண்மை.

முள் - முரு - முருந்து = வெண்மை.

முள் -விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல்.

விள் - வெள் - வெண்மை. வெள் - வெள்ளை. வெள் - வெளு.

XV. வெளுத்தல்

விள் - விளர். விளர்த்தல் = வெண்மையாதல், வெட்குதல்.

விள் - விடி -விடியல் = கரிய இருள் நீங்கி வெளிய ஒளி தோன்றல்.

விள்

வெள் = வெள்ளென

=

வெள்ளெங்காட்டி = விடியற்காலை.

விடிய. வெள்ளெனக் காட்டி

வெள்

வெளு. கிழக்கு வெளுத்தல்

=

விடியுமுன் கீழ்த்திசை

வெள்ளையாதல்.

வெளுத்தல்

=

வெண்ணிறமாதல், வண்ணான் துணிகளை

வெள்ளையாக்குதல் அல்லது துப்புரவாக்குதல்.

வெள் = வெள்கு. வெள்குதல்

=

நாணத்தால் முகம் வெளுத்தல்.

வெள்கு வெட்கு - வெட்கம். வெள் - வெளிறு. வெளிறுதல் = சிறிது வெண்ணிறமாதல்.

xvi. வெண்மையான பொருள்கள்

உல் - எல் - எலும்பு - என்பு.

எல் - எலி எலி = வெள்ளையான எலிவகை. கருப்பை = காரெலி.