உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

விடுத்தல் = வெளிப்படக் கூறுதல்.

விடு (விடி)

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

-

விரிச்சி = (விடிச்சி)

தெ-வத்தால் விளம்பப்

படுவதாகக் கருதப்பெறும் நள்ளிரா நற்சொல்.

பாக்கத்து விரிச்சி = படைமறவர் சென்று தங்கிய பக்கத்து ஓர்ந்து கேட்கும் விரிச்சி.

விடு - விடை. விடைத்தல் = வெளிப்படுத்துதல்.

விள் - வெள் - வெளி - வெளிச்சி = காதிற் புறப்படும் கொப்புளம். கொப்புளத்திற்குப் புறப்பாடு என்னும் பெயருண்மை நோக்குக. வெளி - வெடி. வெடித்தல் = வெளிவருதல், பிஞ்சு விடுதல்.

xxiii. சோம்பல்

சூட்டினால் சோம்பல் உண்டாகும்.

"பசிசோம்பு மைதுனங் காட்சிநீர் வேட்கை தெரிகின்ற தீக்குணமோ ரைந்து"

என்பது அடியார்க்குநல்லார் மேற்கோள்.

சுள் சோர்வு.

சுணங்கு

-

சுணக்கம் = வேலைத் தளர்ச்சி, தாழ்ப்பு, தடை,

சுணங்குதல் = சோம்பற்படுதல்.

சுணங்கு = = சுணங்கல் = சோம்பல், சோம்பேறி.

சுணங் கு சுணங்கி = சோம்பேறி.

சுணங்கி - சோணங்கி = சோர்வுற்றவன்.

சோடன் = சோம்பேறி. சோடை = சோர்வு.

சும் = சோம்பல், ஒன்றுஞ் செ-யாமை.

சும் - சும்மா = ஒன்றுஞ் செ-யாமல்.

சும்மாவிருத்தல்

=

வேலையொன்றுஞ் செ-யாதிருத்தல், ஞானச்

சோம்பல்.

சும்-சும்பு-சும்பன் = சோம்பேறி, பயனற்றவன்.

சும்பு சொம்பு - சோம்பல். சோம்பு ஏறியவன், சோம்பேறி.