உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

157

குல் என்னும் அடியினின்று பிறந்த கனலுதல் கன்றுதல் என்னும் வினைகளும், குள் என்னும் அடியினின்று பிறந்த கா-தல் என்னும் வினையும், சினத்தலைக் குறிக்கும்.

குள் - கள் - கடு. கடுத்தல் = கோபித்தல், வெறுத்தல்.

சுள்ளம் = கோபம், சுள்ளக்கம் = கோபம். சுளித்தல் = கோபித்தல்.

சுண்டுசொல் = சுடுசொல்.

=

குறிப்பு: தொடுதல் (அல்லது முட்டுதல்) என்பது, உள்ளிருந்து தொடுதல் வெளியிருந்து தொடுதல் என இருவகைத்து. கருப்பைக் குள்ளிருந்து தா- வயிற்றைக் குழவி முட்டுதல் உள்ளிருந்து தொடுதல்; தா-வயிற்றினின்று பிறந்த உயிரிகள் தம்மை அடுத்தவற்றைத் தொடுவது வெளியிருந்து தொடுதல்; மரத்துள்ளிருந்து துளிரும் நிலத்துள்ளிருந்து முளையும் முண்டி வெளிவருவது போல, தா- வயிற்றினுள்ளிருந்து குழவியும் முண்டி வெளிவருவது, அதற்குத் தோற்றம். ஆகவே தோற்றமும் உள்தோற்றம் வெளித்தோற்றம் என இருவகைத்து. முட்டைக்குள் குஞ்சும் கருப்பைக்குள் குட்டியும் தோன்றுவது உள்தோற்றம்; அவை பிறப்பது வெளித்தோற்றம். ஆகவே, சிலவற்றிற்கு ஒரு தோற்றமும் சிலவற்றிற்கு இரு தோற்றமும் உளவாம்.