உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

குறிப்பொலிக் காண்டம்

1. உணர்வொலிப் படலம்

மக்கள் தம் உள்ளத்துத் தோன்றும் உணர்வுகளை, தம்மையறியா மலே உடன் வெளிப்படுத்தும் வாயில் ஒலிகள், உணர்வொலிகளாம்.

எடுத்துக்காட்டு:

உணர்வு

மகிழ்ச்சி

நோவு

வியப்பு

இழிவு

இரக்கம்

தெளிவு

லிகள்

ஆ, ஊ,ஏ,ஐ, ஆ.ஓ ஓ

ஆ, ஈ, ஊ

ஆ, ஆஆ (ஆவா) - ஆகா, ஏ, ஐ, ஓ

ஊ,

ஆ ஆஆ ஆவா

இவை போல்வனவே பிறவும்.

ஓஓ

வோ ஓகோ

இவ் வொலிகள், குரல் வேறுபாட்டாலும், மாத்திரை வேறு பாட்டாலும், அசையழுத்த (accent) வேறுபாட்டாலும், அலகுநிலை (pitch) வேறுபாட்டாலும், அவ்வவ் வமையத்திற்கேற்ப வெவ்வேறு உணர்வுகளை உணர்த்தும்.

சில உணர்வுகள் மெல்லிய சகரவொலியால் மட்டும் உணர்த்தப் படும். அவை என் என்னுந் துணைவினை சேர்த்துக் கூறப்பெறும்.

எ-டு: ஊசு ஊசெனல் (உறைத்தற் குறிப்பு)