உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறிப்பொலிக் காண்டம்

(3)

17

ஒரேயொலி வெவ்வேறு செவிக்கு வெவ்வேறு வகையா-க்

கேட்பதால், ஓர் ஒலிக்குறிப்பு வெவ்வேறு வடிவிலும் அமையலாம்.

எ-டு: குறட்டு, துறட்டு

(சலக்கு) சளக்கு, சளப்பு

(குறட்டையொலி)

(துப்பொலி)

(குழவி கதறொலி)

வீர்வீர்,வீரா வீரா

(4) சில வொலிகள் ஒரே செவிக்கு வெவ்வேறு வகையா-க்

கேட்கலாம்.

எ-டு: கு-,சு- (சொ-) =

தாளிப்பொலி.

ஓ, உவா - கக்கலொலி,

ஓ-ஓக்களி, ஓங்களி; உவா உவட்டு - உமட்டு -குமட்டு)2

(5) சில வொலிகள் வாயடைத்த நிலையில் மூக்குவழிப் பிறக்கும் மூச்சொலிகளாதலின், அவை சரியா- ஒத்தொலித்தற்குரியன. அவற்றினின்று பிறக்கும் ஒலிக்குறிப்புகளும் சொற்களும், அவற்றின் மூல வொலிகளை ஒருமருங்கே அல்லது இயன்ற அளவே ஒத்திருக்கும்.

ஒலிக்குறிப்பு

எ-டு:

முக்(கு)

மூங்

சொல்

முக்கு - முற்கு

முனங்கு

முக்குதல் கனமான பொருள்களைத் தூக்கும்போதும், முனங்குதல் கடுநோ-ப்பட்டிருக்கும்போதும், நிகழ்வன.

(6) சில வொலிக்குறிப்பினின்று பிறந்த சொற்கள், மூலவொலி யில்லாத எழுத்தையும் கொண்டிருக்கும்.

எ-டு:

ஒலிக்குறிப்பு

லுலுலுலு

சொல்

குலவை

கடைசியர் மங்கல அமங்கல வினைகளில் வாயால் நிகழ்த்தும் ஒலி

குலவை.

(7) ஒலிக்குறிப்புகளிற் சில தாமே சொல்லாவன; சில தம்மி னின்று சொற்களைப் பிறப்பிப்பன; சில இரண்டுமன்றி ஒலிக் குறிப்பாகவே நின்றுவிடுவன.

3. வழக்கில், ஓக்களித்தல் என்பது கக்கலுக்கு முந்திய வாயசைவையும், உமட்டல் (குமட்டல்) என்பது வாயசைவிற்கு முந்திய வயிற்றுணர்ச்சியையும், குறிக்கும்.