உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

களுந்தோன்றி, வா-ச்சைகை யின்றிச் சொற்களே சுட்டுப்பொருளை யுணர்த்துந் திறம் பெற்றபின், வா-ச்சைகை விட்டுவிடப்பட்டது. அதனால், இன்று சுட்டொலிகளின் வா-ச்சைகைத் தன்மை பொது வா- உணரப்படவில்லை. இதனை ஓர் ஓரன்ன நிகழ்ச்சியால் விளக்க லாம்.

ஒருவரால் கொடுக்கப்பட்ட பொருளின் சிற்றளவைக் குறித்தற்கு, ஆட்காட்டி விரலின் நுனியில் ஒரு சிறு பகுதியைப் பெருவிரலால் தொட்டுக்காட்டி, 'இத்துணையுண்டு (இத்துணைப்போலக்) கொடுத்தான்' என்று முன்பு சைகையோடு கூறிய கூற்று, இன்று சைகை யின்றியே பொருளுணரப்படுதலால், சைகையில்லாமலே கூறப்படுதல் காண்க. இங்ஙனமே சுட்டொலிகளும். 'இத்துணையுண்டு' ‘இத்துணைப் போல' என்னுந் தொடர்கள், இன்று கொச்சை நடையில் 'இத்துனூண்டு’ ‘இத்தினிப்போல' எனத் திரிந்து வழங்குகின்றன.

மூவகைச் சுட்டுக் கருத்துகளினின்றும், சிறப்பாக முன்மைச் சுட்டுக் கருத்தினின்று, பற்பல கருத்துகள் ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒன்றினின் றொன்றாகவும் தொடர்ந்து தோன்றியுள்ளன. அவற்றைக் குறித்தற்கே மூவகைச் சுட்டொலிகளினின்றும் கணக்கற்ற சொற்கள் திரிக்கப்பட்டு, மொழி வளர்ச்சியடைந்து வளம்பெற்றுள்ளது.

மூவகைச் சுட்டுகளுள், முன்மையென்பது அணுகிய எதிர் நிலை. அண்மையென்பது, முன்மையினும் பிற்பட்ட அல்லது பேசு பவனுக்கும் முன்நின்று கேட்பவனுக்கும் இடைப்பட்ட, அருகுநிலை. முன்மைக் கப்பாற்பட்டது சே-மை. சே -மை. உரையாடும் இருவருள் முன்னிற் பவன் நிற்கக்கூடிய தொலைவரையும் முன்மையிடமாக, ஊகாரச் சுட்டு வழக்கற்றதனாலும், முன்மையென்பது சே-மைக்கும் அண்மைக்கும் ஒருவகையில் இடைப்பட்டதாதலானும், இடைக்காலத் திலக்கணியர் முன்மைச் சுட்டை இடைமைச் சுட்டெனக் கருதினர் போலும்!

மூவகைச் சுட்டுகளையும் ஆ, ஈ, ஊ என்ற முறையிற் கூறுவதே நெடுங்கணக்கு மரபாயினும், அம் மூன்றும் சொற்பெருக்க வகையில் முறையே ஒன்றினொன்று சிறந்திருத்தலால், 'சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்' என்னும் உத்திபற்றி, அவை ஈங்கு ஊ, ஈ, ஆ முறையிற் கூறப்படும்.