72
(4) உயர்ச்சி
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
உடம்பால் உயர்தலும் நிலைமையால் உயர்தலும் இடத்தால் உயர்தலும் என உயர்தல் மூவகை.
ஊ உ-மேல்,உயர்ந்த.
எ-டு: உத்துங்கள்.
உத்தரி, உத்தரியம், உத்தூளனம் முதலிய பல வடசொற்களில் உயர்ச்சி அல்லது மேலுறவுக் கருத்தை
முன்னொட்டாயிருந்து,
உணர்த்துவது உகரமே.
உல்லி - மதில்.
உள் = மேன்மை.
உகத்தல் = உயர்தல்.
"உகப்பே உயர்வு"
உகைத்தல் = உயரவெழும்புதல்.
(தொல்.உரி.8)
உச்சம் உயர்ச்சி. உச்சி = உச்சமான இடம். உத்தரம் உயரவிருக்கும் விட்டம், உயர்ந்த வடதிசை.
=
உயர்வு,
குமரிமலை மூழ்கிப் பனிமலை எழுந்தபின், வடதிசை உயர்ந்தது; தென்றிசை தாழ்ந்தது. இதனால், அவை முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன. உத்தரம் (உ+தரம்) = உயர்வு. தக்கணம் (தக்கு + அணம்) தாழ்வு.
=
=
=
உப்புதல் எழுதல், பருத்தல், வீங்குதல். உப்புசம் வயிற்றுப் பொருமல்.
உம்பர் = மேல், மேலிடம், ஆகாயம், தேவருலகம், தேவர்.
உம்பரான் = உயர்நிலையி லிருப்பவன்.
உம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம்.
உம்பல் = உயரமான விலங்காகிய யானை.
உயர் - உயரம், உயர்வு, உயர்ச்சி, உயர்த்தி.
உவணம் = உயரப் பறக்கும் பருந்து. உவணம் உவணன்.
"உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்பது பழமொழி.