உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

(6) உச்சி யணி

உளை = தலையாட்டம்.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உத்தி = திருமகளுருவம் பொறித்த தலையணி. சுமத்தல் = மேற்கொள்ளுதல், தாங்குதல், சும -சுமை.

சுட்டி = நெற்றியணி.

சுடிகை = மகுடம், நெற்றிச்சுட்டி.

சூளிகை = தலையணிவகை. சூடிகை =

மணிமுடி.

சூழி - யானையின் முகபடாம், சேணம்.

சூழியம் = உச்சிக்கொண்டை யணி.

சூளை = முடிமணி (சூளாமணி). சூளை (சூடாமணி), சடைப்பில்லை.

சூடை

=

முடிமணி

சூடுதல் = தலையில் அல்லது கொண்டையில் அணிதல்.

பொறுத்தல் = சுமத்தல், மேற்கொள்ளுதல், தாங்குதல்.

(7) தொங்கல்

தொங்குகிற

பொருள்களெல்லாம்

நிலமட்டத்திற்கு மேற்பட

உயரத்திற் கட்டப்பட்டவை அல்லது அமைந்தவையாதலின், உயர்ச்சிக் கருத்தில் தொங்கற் கருத்துத் தோன்றிற்று. ஒன்றற்கிடமாகும் கனப்பொரு ளெல்லாம் நிலத்தோடொக்கும்.

உறுதல் = உயர்தல். உறி = உயரத்திற் கட்டப்பட்ட தூக்கு.

உக்கம் = கட்டித் தூக்குங் கயிறு.

தூங்குதல் = உயர்தல், தொங்குதல், தொங்கு கட்டிலில் உறங்கு தல். தூங்கு - தூக்கு -தூக்கம்.

=

தூக்குதல் உயர்த்துதல், எடுத்தல், எடுத்து நிறுத்தல், தொங்க விடுதல், தொங்கவைத்துக் கொல்லுதல்.

தூக்கு = ஏற்றம், எடுப்பு, நிறுப்பு, ஒரு நிறை, தொங்கவைப்பு, தூக்கு தூக்கம், தொங்கவிடும் பை.

தூக்கு - தூக்கணம் = கூட்டைத் தொங்கவிடும் ஒருவகைக் குருவி.

தொங்குதல்

=

அடி ஒன்றிற் படாமல் வானத்து நிற்றல், ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்குதல் போல ஒருவனை நெருங்கி வேண்டல்.