உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(9) உயர்ச்சி குறிக்கும் எகர முதற் சொற்கள்

எ-ஏ. உ-எ-ஏ

எஃகுதல் - ஏறுதல்.

எக்குதல் = வயிற்றை நிமிர்த்துதல். எக்கர் = மணல்மேடு.

எகிர்தல் = எழுதல், குதித்தல்.

=

எட்டுதல் = உயர்ந்து அல்லது நீண்டு தொடுதல். எட்டம் = உயரம், தூரம்.

எட்டன் = உயர்ந்தோன்.

எட்டர் = அரசனுக்கு நாழிகைக் கணக்குக் கூறும் ஏத்தாளர்.

எட்டி

=

உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர்

தலைவனுக்கு வழங்கிய சிறப்புப் பட்டம்.

எட்டி - செட்டி. செட்டி - செட்டு = செட்டியின் தன்மை. எட்டி ஏட்டி. செட்டி - சேட்டி.

எடுத்தல் = தூக்குதல், நிறுத்தல். எடுப்பு = உயர்வு.

எடை = நிறை.

எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேற் கணக்கிடுதல்.

எண் = மேன்மேற் செல்லும் தொகை.

எம்புதல் = எழுதல், குதித்தல்.

எவ்வுதல் =எழுதல், குதித்தல்.

எழுதல் = உயர்தல், கிளர்தல். எழு எழுவு.

எழு எழும்பு எழுப்பு, எழு எழில் = உயர்ச்சி, அழகு. எழால்

- -

எழுகை, இசையெழுகை.

ஏ = உயர்ச்சி, பெருமை.

"ஏபெற் றாகும்

மேனோக்குகை.

"கார்நினைத் தேத்தரு மயிற்குழாம்"

ஏக்கழுத்தம் = கழுத்து நிமிர்ப்பு, தலையெடுப்பு.

ஏடு = மேன்மை.

=

(தொல்.உரி7)

(சீவக. 87)

"ஏடுடைய

மேலுலகோடு"

(தேவா. 539:2)