90
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
வட்டு - வட்டணை (1) வட்டச் செலவு.
—
"மாப்புண்டர வாசியின்
""
வட்டணைமேல்
(கம்பரா. படைத். 97)
(2) இடசாரி வலசாரியாகச் சுற்றுகை.
"சுற்றிவரும்
V.கட்டுதல்
வட்டணையில்"
""
(பெரியபு. ஏனாதி.29)
ஒரு பொருளை நூலாலும் கயிற்றாலும் சுற்றிக் கட்டுவதால், சுற்றுதற் கருத்திற் கட்டுதற் கருத்துத் தோன்றிற்று.
சுற்றுதல் = ஆடையை அரையைச் சுற்றிக் கட்டுதல்.
=
புரி - பரி வரி. வரிதல் = கட்டுதல். வரித்தல் கட்டுதல். வரி = கட்டும் அரசிறை. உழவர் கண்டுமுதலில் ஆறிலொரு பகுதியை அளந்து சாக்கிற் கட்டியதனால், அரசிறை வரி எனப்பட்டது. அரிசி பிடித்தல் என்பது எங்ஙனம் அரிசியைச் சாக்கிற் பிடித்து வாங்குதலைக் குறிக்குமோ, அங்ஙனமே வரி கட்டுதலென்பதும் வரிப்பகுதியைச் சாக்கிற் கட்டி வரித்தண்டலாளரிடம் ஒப்புவித்தலைக் குறிக்கும்.
—
முள் - முடு முடி முடிச்சு = வளைத்துக் கட்டிய கட்டு, முடிச்சுப்போன்ற மரக்கணு.
முடி = வளைத்துக் கட்டிய கட்டு. முடிதல் = வளைத்துக் கட்டுதல். முடி முடிப்பு = முடியப்பட்ட பொருள்.
vi. சுழலுதல்
சுழலுதலாவது, ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றுதல். சுழற்றுதல் அங்ஙனஞ் சுற்றுவித்தல்.
―
―
உல் - உலம் = சுழற்சி. உலம்வா உலமா உலமரல்.
உலமருதல் = சுழலுதல், மனம் சுழலுவதுபோல் வருந்துதல்.
—
=
உழலுதல் = சுழலுதல். உழல் உழலை = உழலும் ஆலை யுலக்கை அல்லது வாயிற் குறுக்குமரம்.
உழல்உழற்று உழற்றி = சுழற்சி.
உழல் உழன்றி = மாட்டுக் கழுத்தில் கட்டும் உழலைத் தடி. உல்-அல்-ஆல் ஆலுஆடு. ஆடுதல் = சுழலுதல்.