சுட்டொலிக் காண்டம்
கிள் - கிளை. கிளைத்தல் = கிண்டுதல், கிண்டியதுபோற் பிரிதல்.
97
―
—
கிள் கேள் கேள்வி கேட்டல்
விடுக்கும்
= கிண்டுதல்போல் வினவுதல், விடையைச் செவிமடுத்தல்,
வினவியதற்கு ஒருவர்
செவிமடுத்தல்.
கிள் - கிண்டு - கெண்டு. கெண்டுதல் = கிளைத்தல், தோண்டுதல்.
கெண்டு – கெண்டி = நீருண்கலத்தின் கிளைபோன்ற உறிஞ்சி,அது
உள்ள கலம்.
கிள்
கெள்
கேள்
—
கேழல்
=
நிலத்தைக் கிண்டும் பன்றி,
அதையொத்த யானை.
துல் = துன். துன்னுதல் = உழுதல், கிண்டுதல். துன்னூசி = கலப்பைக் குத்தி.
துள் - துழ - துழவு. துழ - துழா - துழாவு. துழாவுதல் = கிண்டுதல்.
துள் - தொள் - தொ. தொ-தல் = உழுதல்.
நுள் - நள் - நண்டு. நண்டுதல் = கிண்டுதல்.
நண்டற்சோறு = தைப்பொங்கலிற் கிண்டிச் சமைத்த சோறு.
நண்டல் = கிண்டிக் குழைந்த சோறு. நண்டல் கிண்டிப் படைக்கிறது என்பது உலக வழக்கு.
நண்டல் பிண்டல் = கூழுங் கட்டியுமா- ஆக்கிய சோறு. சோற்றை நண்டல் பிண்டலாக்கி விட்டான் என்பது வழக்கு.
நண்டு = நிலத்தைக் கிண்டிச் செல்லும் நீருயிரி.
நண்டு - ஞண்டு.
நுள் - நெள் - நெண்டு. நெண்டுதல் = கிண்டுதல்.
நெண்டு = நண்டு. நெண்டு
கிண்டுதல்.
ஞெண்டு
=
நண்டு. ஞெண்டுதல்
=
முள் - முண்டு. முண்டுதல் = பன்றி முகத்தாற் கிளைத்தல்.
V. அறுத்தல்
அறுத்தலாவது, வாளால் நீட்டுவாகில் பலமுறை துளைத்துக் கீறுதல்
அல்லது துளைத்துத் துணித்தல்.
(உர்) அர் - அரங்கு. அரங்குதல்
=
அம்பு முதலியன தைத்தல்.
(துளைத்து அறுத்தல்.)
அரங்கு - அரக்கு. அரக்குதல் = கிளைதறித்தல், வெட்டுதல்.