உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

98

"தாருந் தோளு மரக்கி”

(விநாயக.பு.42:4)

அரங்கு=அறுக்கப்பட்ட அறை. வட்டாட்டிற்கும் சூதாட்டிற்கும் வகுத்த கட்டம், நடத்திற்கும் நாடகத்திற்கும் வகுத்த நிலம் அல்லது மேடை.

“அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்.'

அரங்கேற்றம்

காட்டல்.

=

(குறள். 401)

மேடையேறிக் கல்வித்திறமும் கலைத்திறமும்

கொண்டிருப்பதை அரங்கரங்கா

ஒரு வீடு பல அறைகள்

யிருக்கிறது என்பது தென்னாட்டு வழக்கு.

=

அரங்கு - அரங்கம் நாடகவரங்கு, சூதாடுமிடம், போர்க்களம், நீரால் அறுக்கப்பட்ட ஆற்றிடைக்குறை, காவிரிக்கும் கொள்ளிடத் திற்கும் இடைப்பட்ட ஆற்றிடைக்குறையைச் சேர்ந்த திருவரங்கம்.

அரங்கம்

திருமால்.

அரங்கன் = திருவரங்கத்தில் பள்ளிகொண்டி ருக்கும்

அரங்கம் திருவரங்கம் அரங்கன் என்பனவே தொன்றுதொட்டு வழங்கிவரும் வடிவங்கள். ரங்கம் ஸ்ரீரங்கம் ரங்கன் என்பன இடைக் காலத்தில் முதற்குறையாகத் திரிந்த வடசொற்களாகும்.

அரங்கு அல்லது அரங்கம் என்னும் சொற்கு அறுக்கப்பட்டது என்பதே மூலப்பொருள்; அர்(உர்) என்பதே மூலம். ரங்கம் என்னும் தலையற்ற சொற்கு மூலமுமில்லை; மூலப்பொருளுமில்லை.

அர் -அறு அறுப்பு.

அறு

அறுவு

அறுவடை.

அறு - அறுவை - அறுக்கப்படும் துணி, துணி.

அறு அறை = துண்டம், கட்டிடப்பகுதி, அறுக்கப்பட்ட அல்லது வகுக்கப்பட்ட இடம், அரங்கு, சூதாடும் கட்டம், பாத்தி.

அரங்கு அறை என்னும் இரு சொற்கட்கும் உரிய பொருள்கள் ஏறத்தாழ ஒன்றாயிருப்பதாலும், அவ் இரு சொற்கட்கும் அர் என்பதே மூலமாதலாலும், அறை யென்னும் சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது வெள்ளிடைமலை யாதலாலும், அரங்கு அல்லது அரங்கம் என்னும் சொல்லும் தென்சொல்லே யென்று தெளிக.