உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

xiii. மலம் பிரிதல்

(புள்) - (பில்) - பேல்.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புள் - புழுக்கை - பிழுக்கை.

(புள்) - பிள் - (பி-) - பீ

பிள் - பீள் - பீளை - பூளை = கண் மலம்.

பிள் - (விள்)

(விள்) - விட்டு - விட்டை.

xiv. நீர்ப்பொருள் பிரிதல்

(புல்) - பில் - பிலிற்று. பிலிற்றுதல் = சிந்துதல், பீச்சுதல். பில் - பீல் - பீர் = ஒரு பீச்சு.

பீல் - பீற்று பீச்சு. ஒ. நோ: கீற்று - கீச்சு.

பிள் - பிழி - பிழியல்.

பிள் பி- பெ- பெயல்.

XV. பகுதல்

பொருள்கள் பல பகுதிகளாப் பிரிதலே பகுதலாம். புள் - (பள்) - (பழு) - பகு. ஒ.நோ: தொழு - தொகு. பகுதல் = பிரிதல். பக்கிசைத்தல் = பிரிந்தொலித்தல்;

பகு பகுதி = பிரிவு, கூறு, கண்டுமுதலில் ஆறிலொரு கூறான அரசிறை, பகுசொல்லுறுப் பாறனுள் ஒன்றான முதனிலை.

=

=

=

=

பகுதி விகுதி என்னும் தென்சொற்களின் பொருளும், ப்ரக்ருதி விக்ருதி என்னும் வடசொற்களின் பொருளும் வெவ்வெறாம். பகுதி : கூறு. விகுதி ஈறு. விகுதல் முடிதல். ப்ரக்ருதி = இயற்கை (முன் செ-யப்பட்டது). இயல்பு. விக்ருதி விகாரம். பகுதியும் திரிபை (விகாரத்தை) அடையக் கூடுமாதலாலும், சந்தி சாரியை இடைநிலை என்பவும் திரிபை யுண்டுபண்ணுதலாலும், விகுதியென்னும் உறுப்பிற்குத் திரிபு என்னும் பொருள் பொருந்தாது. பகுதி விகுதிகள். முறையே முதனிலை இறுதிநிலையென்று பெயர் பெறுதலாலும்,அவற்றிற்குக் கூறு ஈறு என்பனவே சொற்பொருள் என்பது துணியப் படும். களத்தில் முதலாவது அரசனுக்குச் செலுத்தப்படும் பகுதி சிறப்பாகப் பகுதி என்றே பெயர் பெற்றதுபோல், பகுசொல்லுறுப்பு களுள் முதன்மையானதும் பகுதி