உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

103

யென்றே பெயர்பெற்ற தென்க, ஆகவே பகுதி விகுதி யென்பன ப்ரக்ருதி விக்ருதி என்பனவற்றின் திரிபல்லவென்று தெளிந்துகொள்க. பகுதி விகுதியென்னும் தென் சொற்களினின்றே ப்ரக்ருதி விக்ருதி என்னும் வடசொற்களைத் திரித்துக்கொண்டு, அவற்றிற்குப் பொருந்தப் புளுகலாக வேறு பொருள் கூறுகின்றனர் வடவர் என்க.

பகு பகம் = பகுதி, ஆறு என்னும் தொகை.

வேளாளன் விளைவு அரசன், தென்புலத்தார், தெ-வம், விருந்து, ஒக்கல், தான் என்னும் அறுவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தனாலும், பகுசொல் பகுதி, விகுதி, சந்தி, சாரியை, இடைநிலை,வேறுபாடு (விகாரம்) என்னும் ஆறுறுப்புகளா-ப் பகுக்கப்பட்ட தனாலுமே, பகம் என்னும் சொற்கு ஆறு என்னும் தொகைப்பொருள் தோன்றிற்று.

பகு

பகம்

=

பகவன் பகுத்தளித்துக் காப்பவன், பலர்க்கும் படியளப்பவன், ஆண்டவன்.

வேளாளன் அறு சாரார்க்கும், அரசன் அரசியல் வினைஞர்க்கும், ஆண்டை அடிமையர்க்கும் படியளப்பது போல; ஆண்டவனும் பலர்க்கும் உணவைப் பகுத்தளித்துக் காப்பவன் என்னும் கருத்தில், அவனைப் பகவன் என்றனர். இன்றும் ஆண்டவனைப் படியளக் கிறவன் என்று பொதுமக்கள் கூறுதல் காண்க. Lord என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே கருத்துப்பற்றி யெழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.

=

E. Lord, OE. hlaford (loafward) bread. keeper.

இனி, அவரவர்க்குரிய நன்மை தீமைகளை வகுப்பவன் என்று மாம்.

"பால்வரை

தெ-வம்"

என்று தொல்காப்பியர் கூறியதை நோக்குக.

இனி பகு

(சொல்.58)

பகவன் என்றுமாம். எங்ஙனமாயினும் பொருள் ஒன்றே.

பகு - பகுப்பு. பகு

பகல் - பால். பகு - பகை.

பகு - பக்கு - பங்கு. பக்கு - பக்கம் - பக்கல்.