உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

105

அதோடு, bhaj (to divide) என்னும் மூலத்தினின்று வேறு பட்டதாக bhanj (to break) என்றொரு மூலம் காட்டப்படுகின்றது. உண்மையில் இரண்டும் ஒன்றே. தமிழ்ப் பகுதியின் திரிந்த வடிவுகளே வடமொழியில் மூலமாகக் காட்டப்பெறுகின்றன. பகுதிக்கும், முந்தியது மூலம் அல்லது வேர்.

(2) Bhaj என்னும் மூலத்தின் திரிவுகளாக. bhakti, bhaga, bhagavan, bhaga, bhagya முதலிய சில சொற்களே வடமொழியிற் காட்டப்பெறுகின்றன. தமிழிலோ நாற்பதிற்கு மேற்பட்ட சொற்கள் பகு என்னும் பகுதியினின்று திரிந்துள்ளன.

(3) பகுதி பக்கம் பாகம் முதலிய பல சொற்களும் பகு என்னும் ஒரே பகுதியினின்று திரிந்திருக்கவும் அவற்றின் திரிபுகளான ப்ரக்ருதி பக்ஷம் bhaga முதலிய வடசொற்கள் வெவ்வே றெழுத்துகளைக் கொண்டனவா- வெவ்வேறு மூலத்தனவாகக் காட்டப்படுகின்றன.

xvi. தோண்டுதல்

தோண்டுதலாவது ஒரு பொருளின் பரப்புப் பள்ளமாகக் குடையப்

படல்.

உள் - அள் - (அழு) - அகு அகழ் அகழி.

=

குல் - கல். கல்லுதல் = தோண்டுதல். கல் கலம் = தோண்டப் பட்ட ஏனம். கல் கன். கன்னுதல் தோண்டுதல். கன் கன்னம் = தோண்டுதல், துளைத்தல், துளை, துளையான காது. கன்னக்கோல் = தோண்டுங் கருவி.

கன் கனி = தோண்டப்பட்ட சுரங்கம்.

குல் - கில். கிள் - கீள் = கீழ். கீழ்தல் = தோண்டுதல்.

குள் - குழை குடை. குடைதல் = தோண்டுதல்.

குள் (கு)குயில். குயிலுதல் = தோண்டுதல். குயில் குயிலுவம் = மரத்தைக் குடைந்து செ-யப்பட்ட இசைக்கருவி.

சுல் - சூல். சூலுதல் = தோண்டுதல்.

துள் - (தூள்) - தூணி = தோண்டப்பட்ட கலம், ஓரளவு.

துள் துரு தூரி - தூரியம் = குடைந்து செ-யப்பட்ட இசைக் கருவி.