உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

உள் உடு ஊடு.

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

அகு – அகண் - அகணி. அகண் - அகடு = உள், நடு, வயிறு.

நுள் - நள் - நடு - நடுவு - நடுவண் - நாப்பண்.

vii. உள்ளறிதல்

உள் உளவு.

துள் - துர - துரவு. துள் - (துட்பு) - துப்பு.

துப்புத் துரவு என்பது வழக்கு.

viii. ஒழுகுதல்

உள்ளிருந்து அல்லது துளையினின்று விழுதலே ஒழுகுதல்.

உள் - ஒள் -ஒழுகு ஒழுக்கு ஒழுக்கம்.

உள் உறு ஊறு.

குள் - குறு - குற. குறத்தல் = வார்த்தல்.

குறகற் கறவை.

சுள் - (சுர்) - சுர. சுரத்தல் = ஒழுகுதல்.

சுர - சுரை = சுரக்கும் பால்மடி.

சுள் - (சுன்) - சுனை = சுரக்கும் நீர்நிலை.

முள் - மோள். மோளுதல் = சிறுநீர் விடுதல்.

மோள் - மோட்டிரம் - மோத்திரம் - மூத்திரம்.

வடமொழியில் மோள் என்னும் பகுதி அல்லது வினை இல்லை: மூத்திரம் என்னும் வினைப்பெயரே உள்ளது. வினைப்பகுதியினின்று வினைப்பெயர் அமையுமேயன்றி, வினைப்பெயரினின்று வினைப் பகுதி அமையாது.

(3) தளர்தல் துறை

ஒரு பொருள் துளை விழுவதால் கட்டுவிட்டுத் தளர்ச்சி யடைகின்றது.

i. தொளதொளத்தல்

தொளதொளத்தலாவது ஒன்று இன்னொன்றுள் இறுகப் பொருந் தாதவாறு துளையிருத்தல்.