உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

iii. மொள்ளுதல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மொள்ளுதலாவது கலத்தை நீருட்புகுத்தி நீர் கொள்ளுதல்.

குல் - கோல். கோலுதல்

=

மொள்ளுதல். கோல் -(கோலகை)

கோரகை = அகப்பை, கோரகை = கோரிக்கை.

குள் - கொள். கொள்ளுதல் = முகத்தல்.

கொள் - கோள் - கோ = கள்முகக்குங் கலம்.

நுள் - நொள். நொள்ளுதல் = முகத்தல்.

முள்

=

முழு (முகு) முக. முகத்தல் மொள்ளுதல்,

மொண்டளத்தல். முக - முகவை.

முல் - (முழை) - மூழை அகப்பை.

-

முள் - மொள். மொள் மொண்டை மொந்தை = கள் முகக்குங் கலம், மொந்தைபோன்ற தோற்கருவி. (இசை).

மொண்டை

மண்டை

=

நீர்முகக்குங் கலம், இரப்போர் கலம்,

அதுபோன்ற தலையோடு, தலையின் மேற்பகுதி. மண்டைபோன்ற தோற்கருவி (இசை).

iv. முழுகுதல்

முழுகுதலாவது ஒரு பொருள், இன்னொன்றிற்குள் புகுந்து

அமிழ்தல்.

உம் - அம் -அமிழ் ஆழ்.ஆழ்ஆழம் ஆழ் ஆழி.

குள் - குளி. குளித்தல் = உட்புகுதல், முழுகுதல், நீருட் புகுதல்.

"கொடியான் கூர்ங்கணை குளிப்ப'

"எங்கு மருமத் திடைக்குளிப்ப"

"கடற்படை குளிப்ப மண்டி’

(பு. வெ. 10:10. கொளு)

முத்துக்குளித்தல் = முத்துகளை நீருள் மூழ்கியெடுத்தல்.

முள் - (மள்) - மண். மண்ணுதல் = குளித்தல், முழுகுதல்.

"மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி

""

(பு. வெ. 7:23)

(புறம். 6)

(புறம்.

79)

மண்ணுமங்கலம் = அரசன் நீராட்டு விழா.

முள் - முழு முழுகு முழுக்கு. முழுகு-மூழ்கு.

முழுகு (முழுங்கு) - முங்கு (த.வி.); முழுக்கு - முக்கு - (பி. வி.).