உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

V. விழுங்குதல்

129

விழுங்குதலாவது, ஓர் உணவுப்பொருளை முழுக்குதல் போல் திடுமென வா-வழி உட்புகுத்துதல்.

குள் குடி.

நுள் - நொள். நொள்ளுதல் = விழுங்குதல்.

நுள் - நுழு - (நுழுங்கு) - நுங்கு, நுங்குதல் = விழுங்குதல்.

நுங்கு - நொங்கு - நொக்கு. நொங்குதல் = விழுங்குதல். நொக்குதல் உண்டு குறையச் செ-தல்.

புள் - பள் - (பரு) பருகு.

முள் - முழு முழுங்கு விழுங்கு.

=

முழுங்கு (முழுக்கு) - முடுக்கு = ஒருமுறை விழுங்கும் நீர் அளவு. முடுக்கு மடக்கு.

-

விழுங்கு - (விழுக்கு) - விடுக்கு = மடக்கு.

=

முழுக்கு- முக்கு. முக்குதல் ஒன்றை வா-நீருள் முழுக்கித் தின்னுதல்.

"அவலை முக்கித்தின், எள்ளை நக்கித்தின்”

என்பது பழமொழி.

“பாசவன் முக்கித் தண்புனற் பாயும்"

=

(புறம். 63)

முக்கு மொக்கு. மொக்குதல் -நீருள் நிரம்ப முழுக்கித் தின்னுதல்.

vi. ஒளித்தல்

ஒளித்தலாவது ஒன்று இன்னொன்றுள் புகுந்து மறைதல்.

உள் - ஒள் - ஒளி.

குள் - குளி. குளித்தல் = மறைதல்.

"யானறிதல் அஞ்சிக் குளித்து"

99

(கலித்.98)

புள் -பு-பு-தல் = மறைதல்.

"2

கோலப் பகற்களி றொன்றுகற் பு-ய

(திவ். இயற். திருவிருத்.40)

புள் - பள் - படு - (பது) - பதுங்கு - பதுக்கு - பதுக்கம்.