உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

பிறகு - புறகு; பிறக்கு - புறக்கு. புறக்கிடுதல் = புறங்காட்டுதல்.

பிறம் - புறம் - புறன். புறம் = முதுகு. புறம் - புறம்பு = முதுகு. பிறம் - பிறன் - வெரிந் - வெந் - வென் = முதுகு.

பிறம் - பிடம் - பிட்டம் = முதுகு.

iv. மேற்புறம்

133

விலங்குகட்கும் பறவைகட்கும் குப்புறப் படுத்திருக்கும் மாந்த னுக்கும் முதுகு மேற்புறமாயிருப்பதால், முதுகின் பெயர் மேற்புறத் தைக் குறித்தது.

புறம் = மேற்பக்கம், பக்கம்.

புறம் - புறன் -(புறனி) புறணி = மேற்புறம்.

V. வெளிப்புறம்

மடிக்கப்படும் அல்லது சுருட்டப்படும் பொருள்கட்கு முன் பக்கம் உட்புறமும் பின்பக்கம் வெளிப்புறமும் போன்றிருத்தலாலும், உயிரற்ற கனப்பொருள்கட்கு மேற்புறம் முழுதும் வெளிப்புறமா யிருத்தலாலும், மேற்புறத்தைக் குறிக்கும் புறம் என்னும் சொல் வெளிப்புறத்தையுங் குறித்தது.

புறம் = வெளி, வெளிப்பக்கம், புறப்பொருள்.

புறம் - புறவு - புறகு = வெளிப்புறம், புறம்பானவன். புறகு - புறக்கு.

புறம் புறம்பு = வெளிப்புறம்.

=

புறம்பு புறம்பர். புறப்படு புறப்பாடு. புறப்படுதல் வெளி வருதல்.

'உள்ளும் புறம்பும்' 'அகமும் புறமும்' என்னுந் தொடர்களால், புறம் என்னும் சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப்பக்கத்தைக் குறிப்பது தெளிவாம். மூடின கையின் உட்புறமாயிருப்பது உள்ளங் கை அல்லது அகங்கை என்றும், அதன் வெளிப்புறமாயிருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க.

=

புறம் மருதநிலத்திற்குப் புறம்பான முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி.

புறம் -புறவு = முல்லை, குறிஞ்சி. புறம் - புறம்பு புறம்பணை முல்லை, குறிஞ்சி.

=