உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தா-ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ

""

என்று பரஞ்சோதியார் கூறியதற்கேற்ப இலக்கண வரம்பிற் சிறந்த மொழி தமிழேயாதலாலும், இலக்கணத்தைத் தனிப்படச் சுட்ட வேறு தமிழ்ச்சொல் லின்மையாலும், இயல் என்னுஞ் சொல் ஒரு பொருளின் இயல்பையே குறித்தலாலும், இலக்கியத்தைக் குறிக்க இயல் என்னுஞ் சொற்கு இனமான தொன்றுமின்மையாலும், இலக்கணம் இலக்கியம் என்னும் சொற்கள் தூய தென்சொற்களேயென்று தெளிக.

லக்ஷண லக்ஷ்ய என்னும் வடசொற்கள், இலக்கண விலக் கியத்தைக் குறியாமல், குறி (அடையாளம்) என்னும் பொருளையும் அதன் வழிப்பொருள்களையுமே குறித்தலாலும்; வடமொழியில் இலக்கணத்தைக் குறிப்பது வ்யாகரணம் என்னும் சொல்லாதலாலும்; இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்களின் பகுதியான இலக்கு என்னுஞ் சொற்கு அடிப்படையும் உயிர்நாடியுமான இகரம் வடசொற் களில் இன்மையாலும்; அவை தென்சொற்கு மூலமன்மை யறிக.

இனி, குறியென்னும் பொருள் இருமொழிச் சொற்கட்கும் பொதுவாயிருத்தலாலும், தென்சொற்கள் இயற்சொற்களாயும் வடசொற் கள் திரிசொற்களாயு மிருப்பதாலும், வடசொற்கட்குத் தென்சொற் களே மூலம் என்பது பெறப்படும்.

எழுதுதல் என்னும் பொருளில், இலக்கு என்னும் தென்சொல் வடமொழியில் லிக் என்று திரியும்.

இலக்கு என்னும் சொல் மிகப் பழைமையானதாதலால், அதன் பகுதி இன்று இழுத்தற் கருத்தை வெளிப்படையா- உணர்த்த வில்லை. குமரிநாடும் தொன்னூலும் பல பழஞ்சொற்களும் மறைந்து போனமையும் இதற்குக் காரணமாம்.

5. ஆகாரச் சுட்டுப்படலம்

முந்தியல் தமிழர் சே-மையைக் குறித்தற்கு வாயை வாயை அகலத் திறந்தபோது, அது ஆகார வொலிக்கே ஏற்றதா யிருந்ததனால், அவ்

வொலியைச் சே-மைச் சுட்டாக்கினர்.