உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

காலக் கடப்பினாலும் குமரிநாட்டு மறைவாலும் தொன்னூல் அழிவாலும் எண்ணிறந்த சொற்கள் இறந்துபட்டமையால், ஊகாரச் சுட்டடிச் சொற்களின் முதலை விலக்கின்றி எடுத்துக்காட்ட இயல வில்லை. ஆயினும், கூர்மதியர் இந் நூலிற் கூறப்பட்டுள்ள நெறி முறைகளைக் கடைப்பிடித்து ஏறத்தாழ இதுபோதுள்ள சுட்டடிச் சொற்களெல்லாவற்றிற்கும் மூலங் காணவும், அவற்றுள் எண்பது விழுக்காட்டிற்குக் குறையாதவற்றிற்குப் பொருட்காரணங் இயலும்.

கூறவும்,

சில ஊகாரச் சுட்டுவழி யடிகள், அடி நிலையிலேயே உ-அ, உ-எ விதிப்படி திரிந்து விடுவதால், உகரவழித் தொடர்பு பல சொற்களில் தெளிவா-த் தெரிவதில்லை. உல் சுல் நுல் என்னும் அடிகள் பெரும்பாலும் இம் முறையில் திரிந்துள்ளன. எனினும், அவற்றின் கொடிவழியுள்ளும், இடையிடை உகரமுதற் சொற்கள் நின்று முன்னும் பின்னும் பிறமுதலவாகத் திரிந்து நிற்பவற்றை

இணைத்துக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இரண்டொரு கருத்துகள் எதிர்கால வாரா-ச்சியால் இடம் மாறலாம். எடுத்துக்காட்டாக, தோன்றற்கருத்து வழிப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ள இளமைக் கருத்து, சிறுமைக் கருத்து வழிப்பட்ட தாக ஒருகால் துணியப்பெறலாம். ஆயின், பெரும்பாற் கருத்துகள் இடமும் தொடர்பும் ஒருபோதும் மாறா.

தமிழ்ச்சொற்கள் தோன்றியதற்குக் காரணமான எல்லாக் கருத்து களும் இங்குக் கூறப்படவில்லை. தமிழ் எங்ஙனம் தானே தோன்றி வளர்ந்தது என்னும் உண்மை படிப்பார்க்குப் புலனாகும் அளவே இங்குக் கூறப்பட்டுள்ளது. எல்லாக் கருத்துகளையும் இசைத்துக் கூறின் அவை ஒரு பேரகராதியாகப் பரந்து விரியுமாதலின், பெரு வாரிச் சொற்கருத்துகளன்றிச் சிறுவாரிச் சொற்கருத்துகள் பெரும் பாலும் இங்குக் கூறப்பட்டில. கூறப்படாத சிறுவாரிச் சொற்கருத்து கட்குக் கீழ்வருவன எடுத்துக்காட்டாம்.

i. அயன்மை

அண்மைக் கருத்தினின்று அயன்மைக் கருத்துப் பிறக்கும். உள்-அள்-அண்-அண்டு-அண்டை.