உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

அள்-(அ-)-அயல்-அசல்.

அயல் = அண்மை, அடுத்தது, வேறு.

அயலார் = பக்கத்தார், பிறர், தொடர்பற்றவர்.

அண்டை யயல் = அக்கம் பக்கம்.

அயல் வீடு = பக்கத்துவீடு, அடுத்தவீடு.

அயலூர் = பக்கத்தூர், அடுத்தவூர் வேற்றூர்.

அயல்நாடு = பக்கத்துநாடு, வெளிநாடு.

உல்-அல்-அன்-அன்னியம்-அன்ய(வ).

141

அண்மையும் ஒரோவிடத்து இனவுறவைக் காட்டும். ஆயின், பல குடும்பத்தார் அல்லது வகுப்பார் கூடி வாழும் ஓர் ஊரில், ஒரு வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் உறவினரும் இருக்கலாம், நொது மலர் அல்லது பகைவரும் இருக்கலாம். பக்கத்து வீட்டார் உறவினரல் லாதபோது அடுத்தவீட்டு நிலைகூட அயன்மை யுணர்த்தும். இனி, உறவினரல்லாதார் வாழும் பக்கத்து ஊரையும் பக்கத்து நாட்டையும் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. இடத்தின் சே-மைக்குத் தக்கவாறு அயன்மை மிகும்.

ii. அன்மை

அண்மைக் கருத்தினின்றே அன்மைக் கருத்தும் பிறந்துள்ளது. உல்-அல். அல்லுதல் = நெருங்குதல், பின்னுதல், முடைதல்.

அல்-அல்லது

=

அணுகியது, அடுத்தது, இன்னொன்று (வேறு),

அல்லாதது, அல்லாவிட்டால், தவிர.

அல்வழி, அஃறிணை, அன்மொழித்தொகை, அல்பொருள், அல்லகண்டம், அல்லகுறி முதலிய தொடர்மொழிகளில், அன்மைச் சொல் வேறாதற் பொருளை யுணர்த்துதல் காண்க.

அல்லது (அல்வினை) = நல்வினை யல்லாதது, நல்வினையின் வேறானது, தீவினை.

உழுந்தல்லதில்லை = உழுந்தின் வேறானதில்லை.

=

கல்வி அல்லது செல்வம் கல்வி அல்லாதது செல்வம்=கல்வி அல்லாக்கால் செல்வம்.