சுட்டொலிக் காண்டம்
(2) குவிதல் துறை
9
i. குவிதல்
மலர்ந்த பூவின் இதழ்கள் கூடும்போது முகைபோற் குவிதலால், கூடுதற் கருத்திற் குவிதற் கருத்துப் பிறந்தது.
கும்குமிழ் குமிழி.
கும் குமு குமுதம் = பகலிற் குவியும் ஆம்பல்.
கும் - குமி - குவி. குவிதல் = கூம்புதல்.
குவி - குவம் = ஆம்பல்.
கும்பு - கூம்பு. கூம்புதல் = குவிதல்.
கும்பு குப்பு -குப்பி = குவிந்த சிறுகலம்.
கூலங்களையும் கா-கறிகளையும் கல் மண் முதலியவற்றையும் கூம்பிய வடிவில் தொகுத்து வைத்தல் குமித்தல் அல்லது குவித்தல் எனப்படும்.
கும் - குமி - குவி.
கும் - கும்மல். கும் - கும்பு -குப்பு - குப்பல். குப்பு - குப்பை குவியல்.
குமி - குமியல்.
குவி - குவியல், குவால், குவை.
-
-
சும் சும்பு - சூம்பு சூம்பல் = சூம்பிச் சொத்தையான கா-கனி.
சூம்பினகை = கூம்பி மொண்டியான கை.
ii. கைகுவித்தல்
கும்மியடித்தற்கும்
கும்பிடுவதற்கும்
இருகையையும் ஒன்று
சேர்க்கும்போது அவை கூம்பிய வடிவத்தை அடையும்.
கும் - கும்மி = கை குவித்தடிக்கும் விளையாட்டு கும்மி - கொம்மி.
—
=
கும் கும்பு குப்பு - குப்பி கொப்பி = கும்மி.
கும் - கும்மை கொம்மை. கொம்மை கொட்டுதல்
தடித்தல்.
—
=
=
கை குவித்
கும் - கும்பு கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்துத் தொழுதல். கும்பு கூம்பு - கூப்பு. கைகூப்புதல் = கைகுவித்தல்.
துள் - தொழு. தொழுதல் = கை கலத்தல் அல்லது கூட்டுதல்.