உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

iii. குப்புறுதல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பூக்கள் மலர்வது தம் முகத்தைத் திறப்பது போலும், அவை குவிவது அதை மூடுவது போலும், இருத்தலாலும்; பகலில் மலர்ந்து இரவில் கூம்பும் இலைகளும் மலர்களும், பெரும்பாலும், மலரும் போது மேனோக்கியும் கூம்பும்போது கீழ்நோக்கியும் இருத்தலாலும், மாந்தன் மேனோக்கிப் படுத்திருத்தல் மலர்ந்த நிலைக் கொப்பாகவும், கீழ்நோக்கிப் படுத்திருத்தல் கூம்பிய நிலைக் கொப்பாகவும் சொல்லப் படும்.

மலர்தல் = முகம் மேலாதல். மலர்த்தல் = முகத்தை மேலாக்குதல். முகம் மேலாதல்.

மலர்

மல்லார் மல்லா. மல்லாத்தல் மல்லாத்துதல் = முகத்தை மேலாக்குதல்.

=

மல்லாந்துபடுத்தல் மல்லாக்கப்படுத்தல் முதலிய வழக்கு களைக்

காண்க.

கும்பு குப்பு - குப்புறு. குப்புறுதல் = முகங்கவிழ்தல். குழந்தை குப்புற்றுக் கொண்டது, முகங்குப்புற விழுந்தான் என்று கூறுவது வழக்கு. குவி - கவி. கவிதல் = குப்புறுதல், தலைகீழாதல்.

கவி - கவிழ். கவிழ்தல் = குப்புறுதல், தலைகீழாதல்.

“கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை"

(புறம்.77)

குடம் கூடை முதலியவை பொதுவாக வா-மேனோக்கியவாறு வைக்கப்படும். அவை தலைகீழாதல் கவிழ்தல் என்றும், அவற்றைத் தலைகீழாக வைத்தல் கவிழ்த்தல் என்றும், கூறப்படும்.

கவிதல் = தலைகீழான கூடைபோல் வளைதல்.

கவித்தல்

=

தலைகீழான கூடையைப் பிடித்தல்போல் குடை

பிடித்தல், கூடையைக் கவிழ்த்தல்போல் மகுடத்தைத் தலையிலணிதல். கவி - கவிகை = குடை.

கவிகண் = குடங்கையால் மறைக்கப்பட்ட கண் முகில் குடைபோல் வளைந்து நடுதலும் கவிதல் எனப்படும்.

(3) கலத்தல் துறை

i. நெருங்கிக் கலத்தல் (அன்பாற் கலத்தல்)

-

உ பொருந்து (ஏவல்வினை). உத்தல் = பொருந்துதல்.

உத்தம் = பொருத்தம். உத்தி = பொருந்தும் முறை.