உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

iv. விரும்பிக் காக்கும் தலைவன்

ஒரு பொருளை விரும்புகிறவன் அதைப் போற்றிக் காப்பானா தலின், விரும்பற் கருத்து காத்தற் கருத்தையுந் தழுவும்.

எ-டு: பேணுதல் = விரும்புதல், போற்றுதல். “தந்தை தா-ப் பேண்” என்னும் ஔவையார் கூற்றை நோக்குக. ஒரு தலைவனுக்கு அவன் கீழ்ப்பட்டவர் மாட்டன்பு இருத்தல் வேண்டுமாதலால், விரும்புதல் குறித்த சில சொற் களினின்று தலைமை குறித்த சொற்கள் தோன்றியுள்ளன.

நம்புதல் = விரும்புதல்.

"நம்பும் மேவும் நசையா கும்மே"

நம்பு - நம்பன் = தலைவன். நம்பு - நம்பி = தலைவன்.

(தொல். உரி.31)

நயத்தல் = விரும்புதல். நய - நாயம் - நாயன் = தலைவன். நாயம் நாயகம் - நாயகன் = தலைவன்.

வேட்டல்

=

விரும்புதல். வேள் =

தலைவன். வேள் வேளான் =

தலைவன்.

நம்பு நய என்னும் ரு சொற்களும் ஒரே யடியினின்று திரிந்தவையே.

நாயன் = தலைவன், அரசன், கடவுள், தந்தை.

"நாயனார் போனநாள் இன்றென்று

அகத்திலுள்ளோ ரெல்லாருங் கூறி.

(சீவக.. 2097, உரை)

என்னுமிடத்து, நாயனார் என்பது தந்தையைக் குறித்தது. நாயன் நா-ச்சிமார் என்னுந் தொடர் தலைவன் தலைவியரைக் குறிக்கும்.

இறைவனடியாரையும்

தலைவரோடொப்பக் கருதும் வழக்க முண்மையால், நாயன் நாயனார் என்னும் பெயர்கள் அடியாரையுங் குறிக்கும். வள்ளுவனார்க்கு நாயனார்ப் பட்டம் வழங்குவது அவரது புலமைத் தலைமைபற்றி யாகும்.

நாயன் நாயர்

=

சேர (மலையாள) நாட்டுப் படைத்தலைவர் வழிவந்த குலத்தார். நாயன் என்பது தண்டநாயன் என்பதன் குறுக்கம். நாயடு நாயுடு என்பன தெலுங்கு வடிவங்கள்.

நாயனார் - நயினார் = சமணர்க்கும் சில குலத்தார்க்கும் வழங்கி வரும் பட்டப் பெயர். முதலாவது இது தலைமைபற்றி அவ் விரு சாராரின் தலைவர்க்கே வழங்கியது. தந்தையைக் குறிக்கும் நாயனா நயினா என்பவை தெலுங்கு வடிவங்கள்.