உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

15

நாயன் - நாயந்தை - நயிந்தை = ஆண்டான், அடிமை. வைத்தாளுங் குலத்தலைவன், சில குலத்தார் பட்டப் பெயர்.

நாயந்தை என்பது விளி வடிவில் நாயந்தே (நாயன்தே) என்றாகும்.

=

நாயன் - நாயகன் = தலைவன், கணவன், அரசன், கடவுள்.

நாயகம் தலைமை.

நாயகன் - நாயகர் = சில குலத்தார் பட்டப்பெயர்.

நாயகன் - நாகன் = வணிகர் தலைவன்.

=

நா-கன் - நா-க்கன் சில குலத்தார் பட்டப்பெயர்.

நாயகன் - நாயக்கன் = சில குலத்தார் பட்டப்பெயர்.

நா-க்கன் நாயக்கன் என்பனவும் படைத் தலைமை குறிக்கும். இவ் வடிவங்கள் முதலாவது குலத் தலைவர்க்கு வழங்கியவை.

நாயன் - (நாயர்) - நாயிறு = கோள்களுள் தலைமையான கதிரவன், அதற்குரிய கிழமை.

நாயிறு ஞாயிறு. நாயிறு என்பதே உலக வழக்கு

குறிப்பு: நாயன் என்னும் பெயர் தந்தை பெயராகவும் குலப் பட்டப் பெயராகவும் வழங்கும் வழக்கு வடமொழியி லில்லை. தலைவன் கணவன் என்ற பொருளிலேயே அவை அங்கு வழங்கு வன. மேலும், தமிழில் வழங்கும் பல்வேறு வடிவங்களும் வடமொழி யிலில்லை. நாய நாயக (nayaka) என்ற இருவடிவங்களே அங்குள

ஞாயிறு என்னுங் கிழமைப் பெயர் தொன்றுதொட்டு வழங்கி

வருவது.

நாயகன் என்னுஞ் சொல்லுக்கு வடமொழி யகராதியிற் காட்டப் படும் வேர் நீ என்பது. அது செலுத்துதலை அல்லது நடத்துதலைக் குறிக்கும். அச் சொல்லும் நூ என்பதன் திரிபான நீ என்பதே. நீத்தல் செலுத்துதல். நீயான் = கலஞ்செலுத்துவோன்.

V.கலா - த்தல் (பகையாற் கலத்தல்)

இருவர் அல்லது இரு படைகள் நெருங்கிக் கலந்தே போர் செ- வதால், கலத்தற் கருத்தில் பொருதற்கருத்துத்

சண்டையிடுதலைக் கைகலத்தல் என்று கூறுதல் காண்க.

தோன்றிற்று.

=