உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

29

நிறைமொழி மாந்தர் மறைமொழிக் கருத்து வலிமையொடு கூடியது என்பதை “ஆணையிற் கிளந்த" என்னுந் தொடர் குறிப்பா- உணர்த்தும். கருத்து வலிமையொடு கூடாவிடத்து ஒரு மொழியும் ஒரு பயனும் உறாது. மந்திரம் வா-மொழி எனவும் படும். வா-மையான மொழி அல்லது வா-க்கும்மொழி வா-மொழி. திருமூலர் அருளிய திருமந்திரமும் நம்மாழ்வார் இயற்றிய திருவா-மொழியும், கவுந்தி யடிகள் இரு பரத்தரைச் சவித்த மொழிகளும் போல்வன, மந்திரங் களாம். மந்திரத்தைக் காட்டும் மொழியையும் மந்திரம் என்றது ஓர் ஆகுபெயர்.

(6

'எண்ணிய எண்ணியாங் கெ-துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்"

ரு

(குறள். 666)

ஆதலால், திண்ணிய வுள்ளத்தின் வழிப்பட்டதே வா-மொழி என அறிக. மனத்துக்கண் மாசிலனான ஒருவன், ஒருவரை வாழ்விக்கவோ சாவிக்கவோ வா- திறந்து ஒன்றைச் சொல்ல வேண்டுவதில்லை. உள்ளத்தில் உள்ளினாலும் போதும். கடவுளை வேண்டும் மன்றாட்டு எங்ஙனம் உரையின்றி உள்ளத்திலும் நிகழ முடியுமோ, அங்ஙனமே மந்திரமும் என்க.

"நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த" என்னுந் தொல் காப்பியச் சூத்திரத்திற்குப் பேராசிரியர் உரைத்த உரை வருமாறு:-

"இது மந்திரச் செ-யுளுணர்த்துதல் நுதலிற்று." இதன் பொருள்:- நிறைமொழி மாந்தரென்பது, சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் என்றவாறு. அவர் ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனா காமன் மறைத்துச் சொல்லுஞ் சொற்றொடரெல்லாம் மந்திர மெனப் படும் என்றவாறு.

"அவை வல்லார்வா-க் கேட்டுணர்க. 'தானே' என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரமென்றற்கும், பாட்டாகி அங்கதமெனப்படுவனவும் உள. அவை நீக்குதற்குமென உணர்க. அவை:-

66

"ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த

-

காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் சீரிய வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்

செந்தமிழே தீர்க்க சுவா

""

எனவும்,