உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

"முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி

பரண கபிலரும் வாழி - யரணிய

லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட

னானந்தஞ் சேர்க சுவா

""

எனவும். “இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் (ஒருவன்) சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின் மேல் 'பாட்டுரை நூல்' (391) என்புழி அங்கதமென் றோதினான் இன்ன மந்திரத்தை. இஃது ஒருவனை இன்னவாற்றாற் பெரும்பான்மையுஞ் சபித்தற் பொருட்டாகலின் அப் பெயர்த்தாயிற்று. இக் கருத்தேபற்றிப் பிறரும்.

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்"

என்றா ரென்க.”

(குறள்.28)

அமைச்சன் அரசியற் கருமங்களை எண்ணும் அல்லது சூழுந் திறனும் மந்திரம் எனப்படும். திறமையாகச் சூழ்ந்து தப்பாது வா-க் கும் வழிவகைகளைச் சொல்லுதலால், அமைச்சன் அரசற்குக் கூறும் அறிவுரையும் மந்திரம் எனப்பட்டது. மந்திரம் கூறுபவன் மந்திரி.

"மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்"

என்றார் அதிவீரராம பாண்டியரும்.

iii. கருதும் மாந்தன்

மாந்தனை மற்ற வுயிரிகளினின்று வேறுபடுத்திக் காட்டுவது மன்னுந்திறனாகிய பகுத்தறிவே. இயங்கும் உயிரிகட்கெல்லாம் கருதுந் திறமிருப்பினும், அது மாந்தனிடத்திற்போல் மற்ற வுயிரிகளிடத்தில் வளர்ச்சியடைய வில்லை.

"மக்கள் தாமே ஆறறி வுயிரே”

என்றார் தொல்காப்பியர்

(1532).

பொருள்களை உயர்திணை அஃறிணை என இலக்கண நூலார் இரு பகுப்பாகப் பகுத்ததும், அங்ஙனம் பகுத்தற் கேற்ப முன்னரே பொதுமக்கள் அவற்றின் வினைகளைக் குறிக்கும் சொற்களை வெவ்வேறு விகுதி கொடுத்துக் கூறி வந்ததும், அவற்றின் பகுத்தறி வுண்மை யின்மை பற்றியே. மன்னுந்திறம் சிறந்திருத்தல்பற்றியே மாந்தன் மன் எனப்

பட்டான்.