உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

31

ஆங்கிலச் சொல்லாரா-ச்சியாளரும் man என்னும் பெயருக்கு thinking animal என்றே பொருட்காரணங் காட்டுவர். (E. man, from A.S munan, to think.)

மன்

=

மன்னும் (கருதும்) உயிரியாகிய மாந்தன்.

மன்பதை

மக்கட் கூட்டம்.

மன்னுயிர் = மக்கட் குலம்.

""

"நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்' (திருமுருகு.278)

என்றார் நக்கீரர்.

"தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

99

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.68)

'மன்னுயிர்' என்பதற்கு 'மன்னாநின்ற வுயிர்' என்று பரிமேலழகர் உரைக்கும் உரை பொருந்தாது. மன்னாநிற்றல் = நிலைபெறுதல்.

மன் மான் - மாணவன் =

=

மாந்தன்.

மன்

மநு (வ)

(6) பொருத்தல் துறை

பல உறுப்புகளையும் பகுதிகளையும் பொருத்துவது பொருத்து.

i. உறுப்புப் பொருத்து

குள் -கள் - கண் கணு. கண் - கணை. கணுக்கால் = கணைக் கால். கள் களம் = உடம்பையும் தலையையும் பொருத்தும் கழுத்து.

-

களம் - (களத்து) கழுத்து.

கள் - கட்டு.

குள் - கொள் - கொளை = பாட்டு.

-

புல் - பொல் - பொரு பொருந் பொருந்து - பொருத்து.

புள் - (பூள்) - பூண் - பூட்டு. புள் -(புண்) - புணர் - புணர்ப்பு. புள் - பொள் - பொட்டு = நெற்றியெலும்புப் பொருத்து.

முள் - முளி = முட்டு, கணு.

-

முளி முழி மொழி = கைமுட்டு, கரும்புக்கணு.