உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

கொள்கொம்பு - கொழுகொம்பு = பற்றுக்கோடு.

குது கது கதுவு. கதுவுதல் = பற்றுதல். கது பற்றும் செவி.

புல் - (புற்று) - பற்று.

35

=

காது ஒலியைப்

புள் - (பிள்) - பிண்டி - பிண்டம். பிண்டம் = பிண்டம். பிண்டம் = திரட்சி. பிண்டித்தல்

=

– கைக்குள் சோற்றை அல்லது மாவைத் திரட்டுதல், சேர்த்தல், பிடித்தல். பிண்டி - பிடி. ஒ.நோ: கண்டி - கடி. தண்டி - தடி.

"பிள்ளையார் பிடிக்கக் குரங்கா- முடிந்தது.” என்னும் பழ மொழியையும், பொரிவிளங்கா- பிடித்தல், கொழுக்கட்டை பிடித்தல் முதலிய வழக்குகளையும் நோக்குக.

பிடித்தல்

=

கைக்குள் திரட்டுதல், கைக்குள் மாத்திரளையைத் திரட்டுதல் போல் ஒன்றைப் பற்றுதல். கையிற் பிடித்துக்கொண்டது போல் அளவைக் குறைத்தல்.

=

பிடி பிடிக்கப்படும் காம்பு அல்லது அடிப் பகுதி, கைக்குள் பிடிக்கும் அளவு.

சட்டை முதுகிற் பிடிக்கிறது, சோறு பானையடியிற் பிடித்துக் கொண்டது, வீட்டில் தீப்பிடித்து விட்டது, சம்பளத்தில் ஓர் உருபா வைப் பிடித்துவிட்டார்கள், எனக்குப் புழுங்கலரிசிதான் பிடிக்கும் என்பன போன்ற வழக்குகளெல்லாம் உண்மையாகவும் அணிவகை யிலும் பற்றற் பொருளையே குறித்தல் காண்க.

பொல் – (பொற்று) பொற்றி - பொறி = பிடிக்குங் கருவி, சூழ்ச்சியம், இயந்திரம். எலிப்பொறி புலிப்பொறி முதலியவற்றை நோக்குக. ஐம்புல வுறுப்புகளும் பொருள்களின் தன்மையைப் பிடித்தலின்,

பொறியெனப்பட்டன.

ii. கொள்ளுதல்

ஒருவர் ஒன்றைப் பெற்றபின் அதைக் கையிற் கொள்ளுதலால், கொள்ளுதல் என்னுஞ் சொல், விலையின்றிப் பெறுதலையும் விலைக்கு வாங்குதலையுங் குறிக்கும். விலையின்றிப் விலையின்றிப் பெறுதல். வந்ததைப் பெறுதலும் வலிந்து பெறுதலும் என இரு வகைத்து.

கொள்ளுதல் = பெறுதல், வாங்குதல், விலைக்கு வாங்குதல்.