உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

41

பொது – பொதுவன் - குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப் பட்ட முல்லைநிலத்தான்.

பொது

பொதியில் (பொது

இல்) = வழக்காளிக்கும் எதிர்

வழக்காளிக்கும் பொதுவான அம்பலம்.

முன் - மன். மன்னுதல் = பொருந்துதல்.

மன் மான். மானுதல் = ஒத்தல்.

V. துலை (தராசு)

துலையின் சிறப்பியல்பு இருபுறமும் ஒத்தலாதலால், ஒத்தலைக் குறிக்குஞ் சொல்லினின்று துலைப்பெயர் தோன்றிற்று.

"துலைநா வன்ன சமநிலை"

என்று ஆத்திரேயன் பேராசிரியரும்,

"சமன்செ-து சீர்தூக்கும் கோல்

என்று திருவள்ளுவரும், கூறுதல் காண்க.

""

ஒப்பு - ஒப்பராவு. ஒப்பராவுதல் = தராசு செ-தல்.

ஒப்பராவி = தராசு செ-வோன்.

துல்லுதல் = பொருந்துதல், ஒத்தல்.

-

துல் - துல்லியம் துல்லிபம் = ஒப்பு. துலை = ஒப்பு.

துல் - துலம் = நிறைகோல், துலா நிறை.

(குறள்.118)

துல் - துலா = நிறைகோல், நிறைகோல் போன்ற ஏற்றம், நிறை கோல் வடிவான ஓரை.

கைத்துலா ஆளேறுந்துலா முதலிய ஏற்ற வகைகளை நோக்குக. துலாக்கோல் = கழுத்துக்கோல் என்னும் நிறைகோல்.

துலாக்கட்டை = துலாக்கோல் போன்ற வண்டி யச்சுக்கட்டை. துலா - துலாம் = நிறைகோல், துலாவோரை, ஏற்றம், ஒரு நிறை. துலாம் - துலான் = ஒரு நிறை.

துல் - துலை = நிறைகோல், துலாவோரை, ஒரு நிறை, ஏற்றம். துலை - தொலை = ஒப்பு.