உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

நடம் -(நடல்) - நடலை = பாசாங்கு, பொ-ம்மை, வஞ்சனை.

ஒ.நோ: படம் -

-

படல்

படலை.

நடல் – நடலம் = பாசாங்கு, இகழ்ச்சி. கூத்து.

நடலமடித்தல் பாசாங்கு செ-தல்.

நடலம் நடனம் = பாசாங்கு, கூத்து.

=

இனி, நடி + அனம் = நடனம் - நடலம் என்றுமாம். 'அனம்' ஒரு தொழிற்பெயர் விகுதி.

எ-டு: விளம்பு - விளம்பனம், கண்டி - கண்டனம்.

நடம் - நட்டம் - நட்டுவன் = கூத்தாசிரியன். நட்டுவன் - நட்டுவம் = நட்டுவன் தொழில் நட்டுவம் -நட்டு.

43

நட்டுவத்திற்கு மத்தளம் சிறந்த துணையாவது. ஆதலால் நட்டுவனோடு என்றும் மத்தளக்காரன் கூடியே யிருப்பான். அதனால், நட்டுமுட்டு, நட்டுவனும் முட்டுவனும் என்னும் இணைமொழிகள் எழுந்தன. நட்டுவன் என்னும் சொல்லை நோக்கி முட்டுவன் என்னும் சொல்லும், முட்டு என்னும் சொல்லை நோக்கி நட்டு என்னும் சொல்லும் எதுகைபற்றி யமைந்தன.

நட்டு

கோமாளிக்கூத்து.

+

நட்டணம். நட்டு நட்டணை நடிப்பு, கூத்து,

=

நடி அகம் நாடகம் (முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்).

ஆரியர் நாவலந் தேயத்திற்கு வருமுன்னரே, தமிழர் இசை நாடகக் கலைகளில் சிறந்திருந்ததனால், அவர் அவற்றை இயலோடு சேர்த்துத் தமிழை முத்தமிழாக வழங்கி வந்தனர். தலைக்கழகத் தமிழ் முத்தமிழாகவே இருந்தது.

எல்லா நூற்கும் பொதுவான சொல் வழக்கை உலக வழக்கு செ-யுள் வழக்கு என்றும், பொருள் வழக்கை உலகியல் வழக்கு நாடக வழக்கு என்றும், இவ்விரு வகையாக வகுத்திருந்தனர். உலகியல் வழக்கு உண்மையானது; நாடக வழக்கு புனைந்துரை யானது. இவ் விரண்டுங் கலந்த அகப்பொருட் செ-யுள் வழக்கைப் புலனெறி வழக்கு என்னும் பெயராற் குறித்து அதன்படியே தொன்று தொட்டுப் பாடி வந்தனர் முன்னைத் தமிழர்.