உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட் டாயிரு பாங்கினும்

99

உரிய தாகும் என்மனார் புலவர்”

(தொல்.அகத்.53)

என்று சார்பு நூலாரான தொல்காப்பியர் கூறுதல் காண்க.

இங்குக் காட்டப்பட்ட நடிப்புப்பற்றிய சொற்கட் கெல்லாம் வடமொழியில் மூலமாகக் குறிக்கப்படுவது ந்ருத் ந்ருத்த என்னும் வடிவொடு நட்ட(வ.) என்னும் வடிவின் ஒவ்வாமையை என்பதாகும். அறிஞர் கண்டுகொள்க.

viii. அளவு

ஓர் அளவினால் ஒரு முறை அளக்கப்பட்ட பொருள் அளந்த கருவியோடொத்த அளவினதா யிருப்பதால், ஒப்புமைக் கருத்தில் அளவுக் கருத்துப் பிறந்தது. எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல் என்னும் நால்வகையளவுள் முன்னதொழிந்த ஏனை மூன்றிலும், இன்னதுதான் அளவு கருவி என்னும் யாப்புறவில்லை. மக்களெல் லார்க்கும் பொதுவான அளவு கருவிகள் எங்கணும் பெரு வழக்காக வழங்கி வரினும், என்றும் எவரும் தம் வசதிக்கேற்ப எதையும் அளவு கருவியாக வைத்துக்கொள்ளலாம். பருமனிலோ நெடுமையிலோ, ஒரு பொருளுக்கு ஒத்த அளவு இன்னொரு பொருளிற் கொள்ளுவதே அளத்தல் என்க. வசதிபற்றிச் சில அளவு கருவிகள் ஏற்பட்டிருப்பினும், உண்மையில் அளக்கும் பொருளுக்கும் அளக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடில்லை. அளக்கப்படும் பொருளைக்கொண்டே அளக்கவுஞ் செ-யலாம். துணியால் துணியை அளப்பதையும் காயால் காயை நிறுப்பதையுங்

காண்க.

உல் - அல் -அல - (அலவு) அலகு = அளவு.

அல்லுதல் = பொருந்துதல், பொருத்துதல் (முடைதல்).

-

உல் - (உள்) - அள் - அள அளவு அளவை.

அள்ளுதல் = செறிதல், பொருந்துதல்.

புள் (பள்) படு படி. படுதல் = தொடுதல், பொருந்துதல், ஒத்தல்.

-

படுதல் = ஒத்தல்.

"மலைபடவரிந்து”

(சீவக. 56)