உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

"படியொருவ ரில்லாப் படியார் போலும்"

45

(தேவர். 44,7)

படி = ஒப்பு.

படி = ஒத்த அளவு, அளவு. முகத்தலளவு கருவி (நாழி), எடுத்தலளவு கருவி (படிக்கல்), தரம், வகை. நாள்தொறும் நாழியால் அளந்து கொடுக்கப்படும் கூலம், நாட்செலவுக் காசு.

வரும்படி = வருமளவு.

படிப்படியாக = அளவளவாக, மெல்லமெல்ல.

படித்தரம் = நாடொறும் கோயிற்களந்து கொடுக்கப்பெறும் ஒழுங்கு. படிமுறை = மேன்மேலளவு.

படிக்கட்டு = மேன்மேலளவான கட்டு.

எனக்கு ஒருவகையா வருகிறது என்பதை எனக்கு ஒரு படியா வருகிறது என்பர்.

நாழியையும் நிறைகல்லையுங் குறிக்கும் படி என்னும் சொல்லும், மூலத்தின் ஒப்பைக் குறிக்கும் படி என்னும் சொல்லும் ஒன்றே. ஒப்புமைக் கருத்தை யுணர்த்தும் படி என்னும் சொல், போன்மையைக் குறித்து உருவம்பற்றிய சொற்களையும், அளவைக் குறித்து அளவு கருவிபற்றிய சொற்களையும் பிறப்பித்ததென்க.

முன் - மன். மன்னுதல் = பொருந்துதல்.

மன் மான். மானுதல் = ஒத்தல்.

மான் மானம் = ஒப்பு, அளவு, படி, (நாழி.) நாழியை மானம் என்பது வடார்க்காட்டு வழக்கு.

மானவட்டில் = அளவு வட்டில். எண்மானம் = எண்ணளவு.

வருமானம் = வருமளவு, வரும்படி.

மன் - மான்

மா

மா. ஒ.நோ: பண் - பாண் பா.

என்னும் சொல் அள என்னும் பொருளில் ஒருகாலத்து வழங்கிய ஏவல் வினை.

மா + திரம் = மாத்திரம் = அளவு. மா + திரை = மாத்திரை = அளவு. திரம், திரை என்பன தொழிற்பெயர் விகுதிகள்.

திரம் - திரை. ஒ. நோ அனம் -அனை. (வஞ்சனம், வஞ்சனை)