உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

47

தமிழ்நாட்டில் வழங்கி வருபவை. கணக்கன் என்னும் குடிப்பெயரைக் கொண்டவர் தூய தமிழ் மரபினர். பழந்தமிழர் இம்மிக் கணக்கும் கீழ்முந்திரி வா-பாடும் பயின்றவர்.

(10) உறழ்தல் துறை

உறழ்தலாவது ஒன்றாது மாறுபடுதல். அது அகத்தால் உறழ்தலும் புறத்தால் உறழ்தலும் என இருவகை. முன்னது வெறுத்தல்; பின்னது உரசுதல்.

உரசுதல்

உல் -உர் உரிஞ். உரிஞுதல் = உரா-தல். உரிஞ் -உரிஞ்சு.

உர்

உர்

உரசு.

உரை - உரா-.

உர் - அர் - அரம். அர் - (அரவு) - அராவு.

அர் - அர அரக்கு. அரக்குதல் = தே-த்தல்.

குர - குரப்பு - குரப்பம் = குதிரை தே-க்குங் கருவி.

துவை - தோ- - தே-. துவைத்தல் = தே-த்தல், அரைத்தல்.

துவையல் = அரைக்கப்பட்ட கூழ்.

நுள் - நெள் - நெறு நறு நறுமு. நறுமுதல் பல்லைக் கடித்தல்.

நறு - நறுநறு (பல்லைக் கடித்தற் குறிப்பு).

நுறு நெறு நெறுநெறு (பல்லைக் கடித்தற் குறிப்பு).

நுள் - நெள் - நெரு - நரல். நரலுதல் = உரசியொலித்தல், கத்துதல்.

"ஆடுகழை நரலும் ”

"வெண்குருகு நரல"

(புறம்.120)

(அகம்.14)

நரல் – நரலை = ஒலி, கடல்.

நரல் பேசும் மாந்தன், மக்கட் கூட்டம். மாந்தனை மற்ற வுயிர்களினின்று பிரித்துக் காட்டுவது, அவனது பேசுந்திறனே. நரல் - நருள்.

நருள் பெருத்துப் போ-விட்டது என்பது தென்னாட்டு உலக

வழக்கு.

நரல் - நரன் - நரம்.

வால் + நரம் = வானரம். (வாலையுடைய நரன் போன்ற குரங்கு).