உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

ii. தீப்பற்றுதல்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பொருள்கள் ஒன்றோடொன்று உரசுவதால் சூடு பிறக்கின்றது. மூங்கிலும் அரணியும் சக்கிமுக்கியும் அவை போல்வன பிறவும், ஒன்றோடொன்று உரசுவதால் தீயெழுகின்றது.

தோ-தே-

தே-தல் = உரசுதல். தே-த்தல் (பி.வி.).

தே- - தே-வை = உரசும் சந்தனக்கட்டை. தே - - தே - தீ = நெருப்பு. தே- - தேயு (வ.)

நுள் - நெள் - நெரு - நெரி. நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நசுங்குதல்.

நெரு - நெருப்பு.

iii. தெ-வம்

தீயானது முதற்காலத்தில் தெ-வமாக வணங்கப்பட்டதினால், தீயின் பெயரினின்று தெ-வத்தைக் குறிக்கும் பெயர்கள் திரிந்தன.

(சுள் - சுர் - சுரம் - சுரன் = தேவன்).

தே- - தே = தெ-வம், தலைவன்.

தே - தேவு - தேவன்.

தே -- (தெ-) -தெ-வு-தெ-வம்.

iv. மாறுபடுதல்

உறு உறழ் - உறழ்ச்சி. உறழ்தல் = கருத்துமாறுபட் டுரையாடல், சொற்கள் தோன்றலும் திரிதலுமாகப் புணர்தல்.

உடு - உடல் - உடற்று. உடலுதல் = சினத்தல், பொருதல். உடற்றுதல் = சினப்பித்தல், வருத்துதல், அழித்தல். உடு - ஊடு - ஊடல். ஊடுதல் = கோபித்துரையாடாமை. சுறு சுறட்டு = பிடிவாதம். சுறட்டன் = தொந்தரைக்காரன். துல் - துன் - துனி. துனித்தல் = சினத்தல், வெறுத்தல். புல் - புல - புலவி. புலத்தல் = கோபித்துக்கொள்ளுதல். முல் - முறு முறை. முறுத்தல் = கோபித்தல், சினந்து நோக்கல். முறு முறுமுறு முறுமுறுப்பு.